பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155 கால்டுவெல்

அரசனால் அவன் தலைமையில் விடப்பட்ட 200 நாயர்களுடனும் அதே எண்ணிக்கையுள்ள காலாள்களுடனும் திரும்பி வந்து விட்டான். களக்காட்டுக்கருகில் அவர்கள் பூலித்தேவரின் படையுடன் சேர்ந்து கொண்டார்கள். அங்கே பல இடங்களில் மக்புஸ்கானால் நிறுத்தப்பட்டிருந்த படைகள் ஒன்றுகூடிப் போரிட்டுத் தோற்கடிக்கப்பட்டன. நவாபுவின் சிப்பாய்களில் முந்நூறு பேர் தப்பியோட எளிதாயிருக்கத் தம் துப்பாக்கியை எறிந்து விட்டுச் சென்றனர். அத்துப்பாக்கிகளைப் பூலித்தேவரின் ஆள்கள் சேகரித்து, பெருமதிப்புள்ள பரிசாகக் கருதி வைத்துக் கொண்டார்கள். அவன் வெற்றிக்கு அடுத்தாற்போல் எதிரிகள் களக்காட்டுக் கோட்டையில் தப்பி ஓடி ஒளிந்திருந்தவர்களை முற்றுகையிட்டார்கள். அவர்கள் அக்கோட்டையைக் கைப்பற்றுவதற்குள் திருவாங்கூர்ப் படைகள் தங்கள் சொந்த நாட்டில் ஏற்பட்ட சில குழப்பங்களை அடக்க அழைக்கப்பட்டதாகப் பாசாங்கு செய்து திரும்பிவிட்டன. உண்மையில் அப்படையை எதிர்க்கும் பயங்கரத்தைத் தவிர்க்கவும் முக்கியமாய் விரைந்து வரும் மக்புஸ்கானின் காலாட்படையுடன் போர் செய்வதைத் தவிர்க்கவும் அவ்வாறு செய்தார்கள். மூடிமையா அவர்களுடன் சென்றான். பூலித்தேவர் தம் காட்டுக் கோட்டைக்குத் திரும்பினார். அக்காட்டுக் கோட்டையை நோக்கி மக்புஸ்கான் விரைந்து கோட்டைக்கருகே கூடாரம் அடித்துத் தங்கினான். ஆனால், கோட்டையைக் கைப்பற்ற இயலவில்லை. இத்தகைய நிலையில் திருநெல்வேலி மாவட்டங்களில் சூறையாட அனுப்பப்பட்ட பூலித்தேவரின் கூலிப்படையை அடக்கிவிட்டு, அதனால் ஏற்பட்ட பயனால் மனநிறைவு அடைந்ததன்றி, நாட்டை அடக்கிவிட்டதாய்ப் பகட்டாகப் பேசிக் கொண்டான் மக்புஸ்கான். இவ்வீண் பெருமைக்குச் சீக்கிரத்திலேயே இடையூறு ஏற்பட்டது செப்டம்பர் மாதத்தில் மூடிமையா திருவாங்கூருக்குத் திரும்பிவிட்டான். அவனுடன் படையின் பெரும்பகுதி வந்தது. அப்படையினர் மறுபடியும் களக்காட்டிலிருந்தவர்களைத் தோற்கடித்தனர். இந்தப் போரில் எதிரிகள் முதற்போரில் அடைந்த இழப்பைவிட அதிகமாக இழப்படைந்தார்கள். ஏனெனில், எதிரிகள் படையிலிருந்த 200 குதிரை வீரரும் 500 சிப்பாய்களும் கைதாகிப் பிடிபட்டார்கள். அவர்கள் தோல்வியை மிகைப்படுத்தியது அறுவடைக்காலம். எல்லா வரிவசூல்களும் அந்தப் பகுதிகளும் திருவாங்கூர் அரசனால் கைப்பற்றப்பட்டன. எனினும், நவம்பர் மாதத்தில் மக்புஸ்கான் பூலித்தேவரின் இடத்திற்கு முன்னால் தொடர்ந்து சென்று இரு சிப்பாய்ப் படைகளின் பாதுகாவலில் அனுப்பப்பட்ட உணவுப் பொருள்களை இடைமறித்துக் கவர்ந்து