பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 160


கொண்டார்கள். அதன் படி பிணை ஆட்கள் தொண்டைமானிடம் ஒப்புவிக்கப்பட்டவுடன் பணம் செலுத்தப்படும் என்று ஏற்பாடாயிற்று. மகம்மது யூசுப்கான் பிணை ஆட்களையும் அழைத்துக் கொண்டு புதுக்கோட்டை நோக்கிச் சென்றான். புதுக்கோட்டை தொண்டைமானின் முக்கிய நகரம். அவன் வசம் பிணை ஆட்கள் ஒப்புவிக்கப்பட்டார்கள். 1756 மே, ஆறாம் தேதி அவன் மதுரையை அடைந்தான். இங்குச் சிலநாள் தங்கி வண்டிகளையும் களஞ்சியங்களையும் நிரப்பிக் கொண்டு திருவில்லிபுத்தூர்க் கோட்டைக்குச் சென்றான். கடைசியாக எதிரிகள் அடைந்த தோல்வியைப் பற்றி அறியாமலே அவர்களின் ஆட்கள் கோட்டையைத் தங்கள் வசத்தில் வைத்திருந்தார்கள். முகம்மது யூசுப்பைக் கண்டதும் அவர்கள் கோட்டையை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். எதிர்காலத்தில் அக்கோட்டையைக் காவல்புரியப் போதுமான இராணுவப்படையை நிறுத்திவிட்டு நடுமண்டல நாட்டைக் கடந்து கயத்தாற்றிற்குச் சென்றான்.இது திருநெல்வேலிக்கு வடக்கே சுமார் 25 மைல் (18 மைல்) தூரத்திலுள்ள ஒரு நகரம். இங்குதான் மக்புஸ்கான் வெற்றியடைந்த சுறுசுறுப்பற்ற படையுடன் முகம்மது யூசுப்புக்காகக் காத்திருந்தான்.

இந்தத் தடவை முகம்மது யூசுப்பால் அவன் படைக்குத் தேவையான பணத்தை வரிகளிலிருந்து வசூல் செய்ய இயலவில்லை. ஏனெனில் பாளையக்காரச் சூறைக்காரர்கள் பல கிராமங்களையும் அவர்கள் சென்ற பாதைகளிலிருந்த நாட்டின் விளைநிலங்களையும் பாழாக்கிவிட்டார்கள். நிலச் சொந்தக்காரர்கள் இச்சூறையாடலில் நேர்ந்த உண்மையான சேதத்தின் கணக்கை அதிகப்படுத்தி அதிகமான சேதம் ஏற்பட்டதாகப் பாசாங்கு செய்து தாங்கள் அடைந்த இழப்பை விட அதிகமான தொகைக்கு விலக்குகள் வேண்டி இறைஞ்சினார்கள். முகம்மது யூசுப்கானைவிட மக்புஸ்கான் பெரிய இடர்பாட்டில் அகப்பட்டுக் கொண்டான். கர்னல் ஹெரானிடமிருந்து நாட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஒப்பந்தத்தையும் நிறைவேற்ற முடியாது ஜமால் சாகிபுவின் தலைமையில் அவனிடம் அனுப்பப்பட்ட கம்பெனிச் சிப்பாய்களின் சம்பளத்தைக் கொடுப்பதற்கோ அல்லது நீண்ட நாளைய கடன்பாக்கியில்லாமல் அவனுடைய சொந்தப்படை வீரரின் அன்றாட உணவுத் தேவைக்குப் போதுமானவற்றைக் கொடுக்கவோ இயலாது திணறினான். பழைய இத்தாலியக் கூலிப்படைத் தலைவர்களைப் போல் ஹிந்துஸ்தானத்தில் அவனுடைய ஜமேதார்களும் குதிரைப்படை உத்தியோகஸ்தர்களும் தங்களுடைய கச்சைகளை அடமானம் வைத்து இலாபமடைந்த செய்கையைக் கூடத் தக்க அதிகாரத்துடன் கண்டிக்க முடியாமல்