பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161 கால்டுவெல்

செய்துவிட்டது இத்துன்பம்.இதே போன்ற பலவிதமான ஒழுங்கீனங்கள் அவன் அதிகாரத்திற்குட்பட்ட மற்றப் பிரிவுகளிலும் அதிகரித்தன.அதே சமயத்தில் அவனுடைய கவனிப்பின்மையும் நிலையற்ற அறிவும் அவன் நிருவாகத்தில் ஏற்பட்ட எல்லாத் தீமைகளையும் உறுதிப்படுத்துவனாயின.

கயத்தாற்றிலிருந்து மக்புஸ்கானும் முகம்மது யூசுப்பும் முழுப் பட்டாளத்துடன் கிழக்கே 30 மைல் தூரத்திலிருந்த எட்டையபுரக் காடுகளை நோக்கி நகர்ந்தனர்.கட்டபொம்ம நாயக்கனும் எட்டையபுரப் பாளையக்காரனும் பாசறையிலிருந்தனர்.கட்டபொம்மன் புதுக்கோட்டையிலிருந்து தன் பிணை ஆட்களைத் தன் பிரதிநிதிகள் மூலம் மீட்டுக் கொண்டான். அனால் எட்டையபுரத்தான் மேலும் தாமதம் செய்து வந்தான். வேறு எவ்விதப் பயமுறுத்தலும் இல்லாத போதிலும், இச்செய்கையால் அவன் பட்டாளத்தைக் கண்டதும் மிக்க பயமடைந்தான்; அவன் மேலும் கெடுவைத் தள்ளி வைத்தமையால் அவனுடைய ஒப்பந்தத்தின்படி தன் பகைமையை வெளிக்காட்ட இயலாது இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டான். எட்டையபுரத்திலிருந்து நாட்டைக் கடந்து பெரியசாலை அருகே அமைந்துள்ள கொல்லாப்பட்ட என்று சாதாரணமாக வழங்கப்படும் கோயிலோர்ப் பேட்டா (கொல்லார் பட்டி) (கோயிலாரிப்பட்டி?) என்ற வலிமைமிக்க கோட்டைக்குச் சென்றனர். அக்கோட்டை கந்தம நாயக்கன் என்ற கொண்டம் நாயக்கனுக்குச் சொந்தமானது. வரிப்பணம் செலுத்துப்படவேண்டுமென முதல் தடவை கேட்டவுடனே தாமதமின்றிக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தான். ஆனால், தினந்தோறும் பணத்திற்குப் பதிலாக பாசாங்குகளையும் மன்னிப்புகளையும் அனுப்பி வந்தான். இறுதியில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து முகம்மதுயூசுப்பு, கோட்டையைத் தாக்கி முற்றுகையிட்டான். கோட்டை நன்றாகப் பாதுகாக்கப்பட்டிருந்தது. எனினும்,இறுதியில் கைப்பற்றப்பட்டது. ஆப்பிரிக்கப் படைவீரரின் சார்ஜெண்டும் அக்கூட்டத்தினரில் எட்டு பேரும் கொல்லப்பட்டனர்; 65 பேர் காயமடைந்தனர். கூலிப்படைகள் மேலும் அதிகமான துன்பத்தை அடைந்தன. கொல்லப்படாதவர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் பாளையக்காரனும் ஒருவன். கொல்லார்ப்பட்டியிலிருந்து முழுப்படையும் திருவில்லிப்புத்தூரை நோக்கிச் சென்றது. அங்கு ஜூன் 10 ஆம் தேதி அவன் கோட்டையில் தங்கினான்.இதற்குள் அருகிலுள்ள பாளையக்காரர்கள் அனைவரும் கொல்லார்ப்பட்டி பாளையkகாரனின் செய்கையைக் கண்டு கலங்கி, அவரவர்களின் கப்பங்களை நேராகவோ பிரதிநிதிகள் மூலமாகவோ