பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 162

கொண்டு வந்து செலுத்திவிட்டார்கள். பூலித்தேவர் கூட வழக்கமான தமது மோசக்கருத்துடன் சமாதான உடன்படிக்கை ஏற்பாட்டையும் ஒருவன் மூலம் அனுப்பி வைத்தார். கொல்லார்ப்பட்டிக்கும் திருவில்லிப்புத்தூருக்கும் இடையேயுள்ள இளையரான் பண்ணைப் பாளையக்காரனும் தன் ஆள்பிணையை மீட்டுக் கொண்டான். ஆனால், திருவில்லிப்புதூரிலிருந்து வடகிழக்கே 13 மைலில் உள்ள காலன்கண்டான்(கொல்லம் கொண்டான் என்பது இப்பொழுது சேத்தூர் ஜமீந்தாரியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது) பாளையக்காரன் மட்டும் வழக்கமானக் கட்டளையை அசட்டை செய்து கொண்டிருந்தான். உடனே முகம்மது யூசுப்கான் சென்று, அவன் கோட்டையைத் தாக்கினான்.சிறிது எதிர்ப்பிற்குப் பின் கோட்டை கைவிடப்பட்டது.

பாளையக்காரர்கள்

மேலும் நாம் பார்ப்பதற்குமுன் இவ்வாறு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தொந்தரவு கொடுத்துவந்த பாளையக்காரர்களின் நிலைமை என்ன என்பது பற்றி இன்னும் சிலக் குறிப்புகளைக் கொடுக்க விரும்புகிறேன்.இயல் மூன்றில் திருநெல்வேலியில் முதன் முதலில் இப்பிரிவினர் நுழைந்ததைப் பற்றிய குறிப்புகளையும் காண்க.

‘பொள்ளம்’ என்று ஆங்கிலேயர் எழுதும் பாளையம் என்பது ஜாகீர் அல்லது ஜமீந்தாரி மட்டுமன்று; ஓர் அரசனால் ஒரு தலைவனிடம் கொடுக்கப்பட்ட ஒரு மாவட்டமுமாகும். இம்மாவட்டத்துக்குரியவன் பாளையக்காரன் அல்லது போலிகார். அவன் ஆண்டுதோறும் தன் எஜமானனாகிய அரசனுக்குக் கப்பம் செலுத்த வேண்டுவதன்றிச் சண்டைக் காலத்திலும் அவனுக்கு உதவிகள் செய்ய வேண்டும். பாளையம் என்பதற்குச் சாதாரணமாகப் பாசறை என்பது பொருள். பாளையக்காரன் என்பதற்குப் பாசறையை உடைய தலைவன் என்பது பொருள். எனவே, முதலிலேயே பாளையக்காரன் ஓரு பகுதி ஆயுதபாணியான பட்டாளத்தின் தலைவனாய் இருந்தானென்றும் அத்தலைவன் அவனுடைய அரசனுக்குக் கீழ்படிந்து கடமைகள் புரிந்து வந்தானென்றும் அக்கடமைக்குப் பதிலாக அவனுக்கு மாவட்டங்கள் இராணுவ ஆட்சியினரால் கொடுக்கப்பட்டது என்றும் முடிவு செய்யலாம். எப்பொழுதும் அவன் தன் எல்லையை ஒரு நாடாகக் கொள்ளாது பாளையம் அல்லது பாசறையாகவே எண்ண வேண்டும். எனவே, அரசனது நேரிடை ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் வரிவசூல், கொலை முதலியவற்றில் அரசனே நேரில் தலையிட்ட போதிலும், பாளையக்கரரின் எல்லைக்குட்பட்ட இடங்களில் ஏற்படும் எந்த வரிவசூல் அல்லது கொலைக் குற்றவாளிகள் மீதும் தன் அதிகாரத்தைச்