பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169 கால்டுவெல்


தரும் இக்குறிப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் நம் நாட்டில் இருந்த நிலத்தீர்வை நிலையைக் காட்டும் - ந.ச.).

“தலைவனான எட்டையபுர ஜமீந்தார் ஜாதியில் தோட்டியான். அவன் மூதாதையர் பாளையக்காரருடன் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தபோதெல்லாம் ஆங்கிலேயருக்கு ஊழியம் செய்து அதற்குப் பதிலாக மாற்றுப் பரிசுகளுடன் கலகக்காரப் பாளையக்காரரின் தலைவனான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டில் பெரும்பகுதியையும் பெற்றான். இந்த ஜமீந்தாரி, மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்திருந்தது. இங்குப் பஞ்சு விளைகின்ற கரிசல் நிறைந்திருந்ததால், நிலம் வளமிகுந்ததாய் இருந்தது. இங்குள்ள மக்கள் ஜமீந்தாருக்குச் சுமார் மூன்று நூறாயிரம் (லட்சம்) ரூபாய் வரி செலுத்தி வந்தார்கள்.

“அடுத்தபடி என்னப்படுவது சிவகிரி சாத்தூர் ஜமீன்களாகும். இவை திருநெல்வேலிக்கு வடமேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருக்கின்றன. மலைகளிலிருந்து வரும் ஓடைகளால் நீர்ப்பாசன வசதி பெறும் அதிகப்படியான நிலங்கள் அப்பகுதியிலிருந்தன. ஆனால், தரிசுநிலங்கள் செம்மண்ணுள்ள மணல் தரைகளாயிருந்தமையால், கிணற்றுப் பாய்ச்சலில்லாமல் பயனற்றதாயிருந்தன.

“இந்த ஜமீந்தாரிகளும் உடுமலை, சிங்கம்பட்டி, ஆர்க்காடு (பின்னைய இரண்டும் பாளையக்காரர்க்கு உட்பட்டவை) ஜமீன்தார்களும் பழைய பாளையக்கார மறவர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் சொத்துகள் கவனத்துடன் ஆட்சி செய்யப்பட்டன. சிறப்பாக, அவர்களுடைய குத்தகைக்காரர்கள் மன நிறைவடைந்திருந்தார்கள். திருநெல்வேலியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் சில, ஜமீந்தார்களின் சொத்து என்று சிவகிரி, சாத்துர், சிங்கம்பட்டி ஜமீந்தார்கள் உரிமைபாராட்டினார்கள். ஆனால், இந்த மலை எல்லைகள் பெரும்பாலும் அரசாங்கத்தாரிடம் சச்சரவிலிருந்தன. 25550 ரூபாய் வரியுள்ள சொக்கப்பட்டி பழைய ஜமீன்தாரி 1863 இல் ஏலத்தில் விடப்பட்டது. இது பதினெட்டுப் பிரிவுகளாக மிட்டாதார்கள் என்று வழங்கப்படும் பலரின் கைவசமாயிற்று.

பிறகு ஸ்டூவர்ட்டு திருநெல்வேலியிலுள்ள பல ஜமீன்தார்கள், மிட்டாதார்கள், அவர்களுடைய நிலப்பரப்பு, அதன் மக்கள்தொகை, வரிவசூல் முதலியவைகளைப் பற்றி ஒரு விவரமான பட்டியல்