பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 174


வரி வசூல் கலெக்டர்கள் அத்தகைய கொடுமைகளைக் கண்டு இரங்கி, எதிர் நியாயம் சொன்னால், குத்தகை விடுபவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதிலிருந்து கடமையைச் செய்யாததற்கும், பல மோசடிகள் செய்ததற்குச் சான்றாகக் கணக்கற்ற விவாதங்களையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துவிடுவான். மேலும், ஒரு குத்தகைக்கு விடுபவனுடைய சிக்கலான மானியத்தில் இன்னும் சில அசாதாரண மக்கள் தொகையும் இருந்து வருகிறது. அவன் தானாகவே எல்லா நியாய விசாரணைகளையும் வரிவசூல் செய்யும் அதிகாரத்தையும் ஒன்று சேர்த்துவிடுவான். அவன் ஒரு பார்ப்பனனாய் இருந்து விட்டாலோ தானே மாகாணப் புரோகிதப் பிரதிநிதி என்று பெயரிட்டுக் கொள்வான். (கால்டுவெல் ஐயரே கூறும் கருத்தைக் காணீர்! - ந.ச.) மதிப்பையும் ஆளும் அதிகாரச் சக்தியின் பெருமையையும் விளக்குவதற்காகத் தனி ஒரு கூலிக்காரனின் அதிகார வர்க்க நெருக்கடிகளின் பயன்களைப் பற்றி நான் விரித்தெழுதப்போவதில்லை.