பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 176


பாளையக்காரரின் உரிமையற்ற எல்லையற்ற நுழைவுகளால் அதன் பரப்பளவும் மிகவும் குறைந்துவிட்டது. எஞ்சிய இடம் பயிர்த்தொழிலுக்குப் பயனற்றதாகிவிட்டது. இவ்வழிவுகளாலும் குறைகளாலும் அந்தப் பகுதி முழுவதிலுமிருந்து வரும் ஆண்டு வருமானம் 1,20,000 ரூபாயை எட்டுவது அரிதாயிற்று. அதே நேரத்தில் நகரப் பாதுகாப்பு, இராணுவப்படைப் பாதுகாப்பு, நாட்டில் மற்ற இராணுவ அலுவலர்களின் உயர்பணி நிலை ஆகியவற்றிற்கான செலவு இந்த வருமானத் தொகையைப் போல் மூன்று மடங்கு உயர்ந்தது. மற்றொருபுறம் அப்போது திருநெல்வேலியின் கீழ் மதிப்பிடப்பட்ட நாடு மிகச் செழிப்புள்ள பரந்த நிலமாயிருந்தது. அது ஆண்டுதோறும் சாதாரணமாக 11 இலட்சம் முதல் 12 இலட்ச ரூபாய் வரை வருவாய் தரத்தக்கதாயிருந்தது. ஆனால், அதற்காக மதுரையும் அதன் மாவட்டங்களும் எதிரிகளின் வசமாவதா? திருநெல்வேலி நாடு அடிக்கடி பயங்கர அழிவு செய்யும் தாக்குதலுக்கு இலக்காகி வந்தது. திருச்சிராப்பள்ளியிலிருந்து ஓர் உதவியும் பெற இயலவில்லை. இந்நிலை, இழப்பில் நடத்தினாலொழிய மற்றொன்றிலிருந்து பெறவேண்டிய நன்மைகளைப் பாதுகாக்க இயலாது என்ற சூழ்நிலையை உருவாக்கியது.

முதலியார் குடும்பம்

முதலியார் குடும்பம் நூறு ஆண்டுகளாக இரண்டு நாடுகளிலும் பயிர்த்தொழில் மிக்க மாவட்டங்களில் பணியாற்றியது. நாளடைவில் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் குத்தகைக்கு விட்டனர். இதனால் அங்குள்ள ஒவ்வோர் உடைமையின் மதிப்பும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. எனவே, அவன் மதுரை மாவட்டங்களைக் குத்தகை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான், ஆனால் திருநெல்வேலி நாட்டை மட்டும் மூன்று ஆண்டுகட்குக் குத்தகை எடுத்துக் கொள்ள உடன்பட்டான். அதன்படி எல்லாச் செலவுகளும் போக 11 இலட்சம் ரூபாய் ஆண்டு வாடகையை ஆண்டுதோறும் மூன்று பகுதிகளாகச் செலுத்த இசைந்தான் (அந்நாளைய பண மதிப்பையும் இதனால் அறியலாம். ந.ச.). இதற்கு ஈடாக வரிவசூல், கொலை வழக்கு விசாரணை அனைத்துத் துறைகளிலும் வழக்கப்படி செலவு செய்ய வேண்டியிருந்தது. மாகாணத் தலைவனால் நியமிக்கப்பட்ட அதிகாரியின் கீழ் பணிபுரியும் கம்பெனிச் சிப்பாய்கள் ஆயிரவரைக் காப்பாற்றும் பொறுப்பைத்தானே ஏற்பதாகக் கூறினான். உடன்படிக்கை கையெழுத்தான மூன்று மாதங்களுக்குள் உடன்படிக்கைத் தொகையை ஒழுங்காகக் கட்டக்கூடிய சிறந்த சராப்புகள் அல்லது நாணய