பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179 கால்டுவெல்


கொள்ளையடிக்கத் தொடங்கின. ஆங்கிலேயருடன் உடன் படிக்கை செய்து கொள்வதில் அடையும் வெற்றியில் அவன் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பைத் தவிர வேறெதுவும் கிட்டாது. ஆதலால், இந்தக் குழப்பங்களால் ஏற்படவிருக்கும் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள் பரக்கதுல்லாவின் இக்கட்டான நிலைக்கு மிகவும் சாதகமாயிருந்தன. நவம்பர் மத்தியில், படை புறப்பட்டுச் செல்லத்தக்கபடி தரை உலர்ந்ததும் நகரத்திலிருந்து அவன் சென்று ஐந்நூற்றுவர் அடங்கிய தரைப்படையின் தலைவனாய்ச் சேர்ந்து விட்டான். இக்குதிரைப்படை ஏற்கெனவே புறப்பட்டு இப்பொழுது நபிகான் கட்டாக்குடனும் பாளையக்காரரின் துருப்புகளோடும் சேர்ந்து கொண்டன. படையின் மொத்த பலம் பதினாயிரம் வீரரைக் கொண்டதாயிருந்தது. அதில் ஓராயிரவர் குதிரை வீரர் தெற்கு நோக்கிப் பரந்து கிடந்த நாட்டிற்குள் நேரே முன்னேறுவதற்கு மாறாக மதுரைக்கு தெற்கே சுமார் 40 மைல் துரத்தில் கூடினர்; கட்டபொம்ம நாயக்கனுடைய மாவட்டங்களின் கிழக்குப் புறத்தே தங்கிவிட்டனர். அக்காட்டுப் பகுதி திருநெல்வேலி நகரத்திற்கு சில மைல் தூரம் வரை பரவியிருந்தது.இரவில் அங்கிருந்து விட்டு அவர்கள் வருகை அறியப்படுவதற்கு முன்பே பொழுது புலர்வதற்குள் அவர்கள் நகரத்தில் பலமற்ற காவலுடைய பல வீதிகளிற் புகுந்தார்கள். ஏனெனில், சில நாள்களுக்கு முன்புதான் முதலி மிகப் பெரிய சிப்பாய்ப் படையுடனும் தன்னுடைய மற்றப் படைப்பகுதியுடனும் தென்கிழக்கே சுமார் இருபது மைல் தூரத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி மாவட்டங்களைப் பாதுகாக்கப் படையெடுத்திருந்தான். சூழ்நிலை, ஆழ்வார் திருநகரியையே எதிரிகள் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக அவனை நம்பச் செய்தது.

கோபுரத்திலிருந்து குதித்து உயிர்விட்ட அந்தணர்

எதிரிகள் திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் தங்கி பெருங் கொள்ளையடித்தார்கள். ஆனால், கொடுமைகள் இழைக்கவில்லை. இந்த தாமதத்தின்போது, முதலி ஆற்றின் அக்கரையில் நகரத்திலிருந்து சுமார் மூன்று மைல் தூரத்திலுள்ள பாளையங்கோட்டைக் கோட்டையைத் திரும்பக் கைப்பற்றினான். கோட்டை பெரும்பரப்புடையதாய் இருந்தது. ஆனால், கொத்தளங்கள் பாழடைந்திருந்தன. ஆயினும், பீரங்கிக் குண்டுகள் இல்லாத பகைவரை எதிர்க்கத் தக்க வலிமை அக்கோட்டைக்கு இருந்தது. இரண்டு நாள்களாக எவ்வித அழிவையும் ஏற்படுத்தாமல் வெடிகளும் துப்பாக்கிகளும் சுடப்பட்டன. இந்த நாள்களில் குதிரைப் படை நாட்டைச் சுற்றிச் சூறையாடின. மதுரைக்கு முன்னிருக்கும் கந்தர்