பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 182


எண்ணிக்கையுள்ள சிப்பாய்களைப் பாளையங்கோட்டைக் கோட்டையைக் காக்கவும் நிறுத்திவிட்டுச் சென்றனர்.

யூசுப் அளித்த கொடுந்தண்டனை

சில நாள்களுக்குப் பிறகு பரக்கத்துல்லாவும் கட்டாக்கும் 500 குதிரைவீரருடன் பூலித்தேவரிடம் சென்றனர். படைத் தலைவன் மகம்மது யூசுப், லெப்டினண்டு ரம்போல்டின் கட்டளையைப் பெற்றதும் தான் செய்து கொண்டிருந்த பயணத்தை நிறுத்திவிட்டுத் திருநெல்வேலிக்குத் திரும்பினான். அங்கு முன்போல் 1000 சிப்பாய்களை விட்டுவிட்டு, எஞ்சிய சுமார் 1800 சிப்பாய்களுடன் மதுரையை நோக்கி முன்னேறினான். இயற்கையில் கோழையாகிய குத்தகைக்கார முதலி, பெரும்படையுடன் சேர்ந்து செல்லத் தீர்மானித்தான். அன்றியும், வழக்கமான பரிவாரங்களைத் தவிரப் புதியவர்களாய்ச் சேர்ந்த நூறு சிறந்த குதிரைவீரர்களும் அவனைத் தொடர்ந்தார்கள். அவர்கள் டிசம்பர் 16இல் கங்காதரத்தை (கங்கைகொண்டானை) அடைந்தார்கள். அங்கு லெப்டினண்டு ரம்போல்டு மதுரையை விட்டுப் புறப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட மகம்மது யூசுப் எதிரிகளின் நடவடிக்கைகளைக் கவனிக்க அங்குத் தங்கினான். நபிகான் கட்டாக்கும் பரக்கத்துல்லாவும் பூலித்தேவரிடம் சென்ற செய்தியைப் பெறும்வரை அங்கேயே இருந்துவிட்டுப் பிறகு திருவில்லிபுத்துருக்குப் புறப்பட்டனர். அப்பகுதி நாட்டிலுள்ள பாளையக்காரர் எதிரியைச் சேரவிடாது பயமுற்றுவதற்காக அங்குப் பாடி வீடு அமைத்துத் தங்கினான். படையெடுப்பின் போது முதலி உறவினர்களுள் ஒருவனான அழகப்பனைப் பூலித்தேவரிடம் அனுப்பி, அவனுடன் சமாதானம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அதற்கு ஊதியமாகச் சில மாவட்டங்களைத் தருவதாகவும் உடன்படிக்கை செய்து கொண்டுவரச் செய்தான். எந்தச் சூழ்நிலையிலும் எதையும் மறுத்தறியாதவரும், ஒருபோதும் தமது வாக்குறுதியைக் காப்பாற்றாதவருமாகிய பூலித்தேவர் உடனே தம் பிரதிநிதி ஒருவனை திருவில்லிபுத்துருக்கு அழகப்பாவுடன் அனுப்பிவைத்தார். அதே சமயத்தில், பரக்கத் துல்லாவையும் நபிகான் கட்டாக்கையும் சென்றடையும்படி அவருடைய துருப்புகளை அனுப்பினார். அவர் மேற்கொண்ட சமாதானச் செயலுக்காக வழக்கமானப் பாசாங்கு மரியாதைகளுடன் அந்தப் பிரதிநிதி இருநூறு முந்நூறு கூலிப்படை தொடர அழைத்துச் செல்லப்பட்டான். முகம்மது யூசுப் பூலித்தேவரின் பண்பை அறிந்தவதனாதலால், இந்த உறவை முழுதும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். அதே சமயத்தில் திருநெல்வேலியின் மேற்குப்