பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187 கால்டுவெல்


விதித்திருந்த தண்டனைப் பணத்தின் மீதித் தொகையாகிய 18,700 ரூபாயைச் செலுத்தி விட்டுத் தங்கள் பிணை ஆள்களை மீட்டுக் கொண்டு நவம்பர்மாத மத்தியில் அப்படை திருநெல்வேலி நகரத்தை அடைந்தது. அங்கிருந்து அவர்கள் வருகையை அறிந்த மக்புசுகான் நெல்லித்தங்கவில்லி (நெற்கட்டுஞ் செவ்வல்) க்குத் திரும்பினான். அவன் அங்கிருந்த காலத்தில் பாளையங்கோட்டைக் கோட்டையைக் கைப்பற்றப் பலவித முயற்சிகள் செய்து கொண்டிருந்தான்; ஆனால், களக்காட்டைக் கைப்பற்றி அதைத் திருவாங்கூர் அரசனுக்குக் கொடுத்தான். மகம்மது யூசுபு உடனே அந்த இடத்தை நோக்கித் தன் படையினருள் ஒரு பகுதியுடன் படையெடுத்துச் சென்றான். திருவாங்கூர் உடனே எவ்வித எதிர்ப்புமின்றி அப்பிரதேசத்தைக் காலி செய்துவிட்டனர். அவன் மேலும் தொடரவே, கடல் முனையருகே மலைகளிலிருக்கும் கணவாய்களின் சுவர்களுக்குப் பின்னே சென்று ஒளிந்து கொண்டனர். அதே நேரத்தில் மற்ற படைப்பகுதிகளின் வருகை பாப்பன்குளம், ஆழ்வார் குறிச்சி, பிரம்மதேயம் முதலிய இடங்களில் மக்புசுகானால் நிறுத்தப்பட்டிருந்த காவலாளிகளையும் தரங்குறிச்சியிலுள்ள வடகரையில் பாளையக்காரர்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவலாளிகளையும் பயந்து ஓடும்படிச் செய்தது. இந்த இடங்கள் எல்லாம் நெல்லித்தங்கவல்லிக்கருகே திருநெல்வேலியின் வடமேற்கே அமைந்துள்ளன. இவைகளைப் பாதுகாக்கச் சிப்பாய்க் கூட்டங்கள் நியமிக்கப்பட்டன. இதற்கான வரிவசூலை மேற்பார்வையிடத் தக்க திறமை மாடலே என்பவரிடம் இல்லை என்பது தெரிந்தது. எனவே, அவன் நிருவாகத்தைப் பற்றிய விவரத்தை விளக்கச் சென்னைக்கு அழைக்கப்பட்டான். ஆனால் நோய்வாய்பட்டுத் தொண்டைமான் காடுகளில் கணக்குகளைச் சரிக்கட்டினான்.

கூட்டணிக்காரர்கள் கொள்ளை

இந்த நாடுகளில் மக்புசுகான் தன்னுடைய படையைக் காத்துக் கொண்டு போலிச் செய்கைகள், உடன்படிக்கைகள் முதலியவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வரை இந்நாட்டிலுள்ள குழப்பங்களும் குறையாது என்பதையும் அங்குள்ள படைகளுக்குப் போதுமான வரியைக் கூட வசூலிக்க இயலாது என்பதையும் காப்டன் காலியட்டின் நேரடிக் கூற்றுகளிலிருந்து சென்னை அரசாங்கத்தார் ஐயமறக் கண்டு கொண்டனர். எனவே, மக்புசுகான் தன் குதிரைப்படையுடன் நாட்டைவிட்டு வெளியேறி மற்ற துருப்புகளையெல்லாம் கலைத்துவிட்டால் அவனுக்கு வரிப்பணத்திலிருந்து அவனுடைய