பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189 கால்டுவெல்

 துணை கொண்டு வரும் ஐதர் அலி அங்கு வரலாமென ஊகித்துத் தன் படைகளை மதுரையில் சேர்த்து வைத்துக்கொண்டிருந்தான். ஐதர் அலி அங்கிருந்து சென்று விட்டான் என்ற செய்தி உறுதியாய்த் தெரிந்ததும், மகம்மது யூசுப்பு சாத்துரை நோக்கிப் படையை நடத்திச் சென்றான். அவனைக் கண்டதும் பாளையக்காரர்கள் பணிந்து, பூலித்தேவரின் ஆட்களை விரட்டிவிட்டு, அபராதப் பணத்தைச் செலுத்தினார்கள். ஆங்கிலத் துருப்புகள் அங்கிருந்து திருவில்லிபுத்துருக்குத் திரும்பியவுடனே பாளையக்காரன் தன் கொள்ளைகளை நடத்த ஆரம்பித்தான். உடனே மகம்மது யூசுப்பு மறுபடியும் கோட்டையைத் தாக்கினான். பாளையக்காரன் சிறிது எதிர்த்துப் போராடிக் கோட்டையை விட்டுவிட்டு ஓடிவிட்டான். அவனுடைய உறவினர்களுள் ஒருவன், அந்த இடத்தில் நியமிக்கப்பட்டான். இதற்குள் கூட்டணிக்காரர்கள் நெல்லித்தங்கவில்லி (நெற்கட்டுஞ் செவ்வல்) யிலிருந்து பல தாக்குதல்களைச் செய்து இதற்கும் திருநெல்வேலிக்கும் இடையேயுள்ள பல இடங்களைக் கைப்பற்றி அவற்றைக் காப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல காவலாளிகளையும் கொன்று குவித்தார்கள். இரவில் தாக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்ட தாரங்குறிச்சியில் 27 குதிரை வீரர்களும் ஏராளமான சிப்பாய்களும் கொல்லப்பட்டார்கள். இவ்வெற்றிகளால் செருக்கடைந்த கூட்டணிக்காரர்கள் தங்களுடன் சேராதவர்களை எல்லாம் அச்சுறுத்தினார்கள். மறுத்த டெல்லிப் பாளையக்காரனைத் தாக்கினார்கள். அதே போலத் திருநெல்வேலியையும் கைப்பற்றத் தாயாரானதுமின்றிப் பாளையங்கோட்டைக் கோட்டையையும் கைப்பற்றுவதாகப் பெருமை பேசிக் கொண்டார்கள். ஆனால், திருவில்லிபுத்துரிலிருந்து முகம்மது யூசுப்பின் வருகையால் அவர்களுடைய புறப்பாடு நின்றுவிட்டதுமன்றி அவனை எதிர்த்துப் போரிடத் தக்க துணிவுமின்றி இருந்தார்கள். என்றாலும், அவர்கள் கைப்பற்றிய இடங்களைப் பலப்படுத்திக் கொண்டு நெல்லித்தங்கவில்லி (நெற்கட்டுஞ் செவ்வலு)க்குத் திரும்பினார்கள். எனினும், மகம்மது யூசுப் மேலும் முன்னேறாதவாறு அவனுக்கு இடையூறுகளையும் அலைக்கழிவுகளையும் உண்டாக்குமாறு தங்கள் படைகளை அனுப்பி வைத்தார்கள். ஆனால், வெற்றி கிட்டவில்லை. யூசுபின் படைகளைச் சந்திக்கச் சென்ற படையும், சிப்பாய்களின் தாக்குதலைச் சகிக்க இயலாத படைகளும் தோற்கடிக்கப்பட்டன. ஏப்பிரல் இறுதிக்குள் சூழ்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்ட எல்லா இடங்களும் மீட்கப்பட்டன. பிறகு மகம்மது யூசுபு பகைவரின் நாட்டினுள்ளே போரிடத் தீர்மானித்தான்; எனவே, வடகரை