பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 194

குதிரை வீரரையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டோ சென்றனர். இதையறிந்த மகமது யூசுபு ஏழு சிப்பாய்ப் படைக் கூட்டத்தை அனுப்பினான். அப்படை அந்தக் காவலைக் கைப்பற்றி அடுத்துள்ள நாடுகளைக் காப்பாற்றுவதற்காக அங்கேயே தங்கியது. திருநெல்வேலிக்குத் தெற்கேயுள்ள மாவட்டங்களிலும் இதே போன்ற குழப்பங்கள் ஏற்பட்டன. மலையவர் அல்லது திருவாங்கூர் அரசனின் துருப்புகள் களக்காட்டிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள மலையடி வாரங்களில் அறுவடையான தானியங்களைச் சூறையாடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஏற்பட்ட பலவிதமான குழப்பங்களையும் ஒரே சமயத்தில் இரண்டு மாவட்டங்களிலுமுள்ள எல்லா வரிவசூலும் சேர்ந்து உருவாக்கப்பெற்ற பெரிய படை இருந்தாலன்றி எதிர்க்க முடியாது. ஆனால் அந்த அரசன் ஆங்கிலேயரிடம் குறைந்த பகையுடைய எதிரி. ஏனெனில் வடகிரிப் பாளையக்காரர் வடகரைக்குத் தெற்கே பல மைல்களுக்கிடையேயுள்ள செங்கோட்டைக் கணவாய் வழியாக மலைகளுக்கு மறுபுறுத்திலுள்ள அவனுடைய நாடுகளை அடிக்கடி கூலிப்படைகள் மூலம் கொள்ளையடித்து அவனது சீற்றத்தைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் பொதுப் பகை காரணமாக மகமது யூசுபு அந்த அரசனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சித்தான். அரசனும் ஏற்றுக் கொண்டு, அவனுடைய நாட்டின் முனைக்கருகேயுள்ள எல்லையில் ஆலோசனை செய்ய உடன்பட்டான். ஆகஸ்ட் இறுதியில் அவர்கள் சந்தித்தார்கள். முதல் உரையாடல் மிக்க மரியாதையும் போலி அன்பும் நிறைந்ததாயிருந்தது. அரசன் வெளிப்படையாக எதையும் கேட்கவில்லை. வடகிரி பூலித்தேவருக்கு எதிராக மகமது படையுடன் கூடப் போதுமான படை தந்து உதவவும் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் அவன் நாட்டினூடே அவர்கள் செல்லவொட்டாமல் தடுக்கவும் உடன்பட்டான். செப்டம்பர் 3 ஆம் தேதி மகமது யூசுபு திருவாங்கூர் எல்லையிலேயே இருந்தான். அவனுடன் அவர்கள் நாட்டிலேயே செய்யப்பட்ட கனமானத் துப்பாக்கிகளுடன் ஐரோப்பிய முறையில் திருத்தமற்றப் பயிற்சி பெற்ற அரசனுடைய 100 சிப்பாய்கள் வந்து சேர்ந்து கொண்டனர். ஆனால் அவர்களுக்குப் போதுமான வெடிமருந்து முதலியவை இருந்தன. அவன் பிறகு திருநெல்வேலிக்குத் திரும்பினான். அங்கிருந்து எல்லாப் படையுடன் அரசனிடம் கூறியதுபோல பூலித்தேவரின் இருப்பிடமாகிய நெல்லித்தங்கவில்லிக்கு (நெற்கட்டுஞ்செவ்வல் - ந.ச.) அப்பால் இருபது மைல் தூரத்தில் உள்ள வடகரையை நோக்கி நேரே சென்றான். அவன் செங்கோட்டையை நெருங்கும்போது கணவாயின் வழியாகப்