பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195 கால்டுவெல்


பலவிதமானப் படைகளும் சுமார் 10,000 அடங்கிய அரசனுடைய பெரும்படையொன்றும் அவனுடன் சேர்ந்து கொண்டது. இது ஒருவேளை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய்த் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய படையாய் இருக்கலாம். வடகரை தன் காட்டைக் காக்க ஒரு நாள் போர் செய்தான். அதில் இருபக்கங்களிலும் ஏறக்குறைய 100 ஆட்கள் கொல்லப்பட்டனர்; காயமடைந்தனர். ஆனால் அவன் இரவில் கோட்டையை விட்டு விட்டுத் தப்பி நெல்லித்தங்கவில்லியிலுள்ள பூலித்தேவரிடம் ஓடிவிட்டான்.

முதல் தடவையாக அவ்வளவு துன்பத்திற்காளாக்கப்பட்ட அத்தகைய ஒரு விருந்தாளியின் வரவு பூலித்தேவரை அச்சமடையச் செய்தது. அவ்வச்சப்புயலைத் தன்னிடமிருந்து திசை திருப்ப அவன் தந்திரம் வேலை செய்யத் தொடங்கியது. செப்டம்பர் 30 ஆம் தேதி வந்தவாசியிலுள்ள கோட்டைத் தாக்குதலில் ஆங்கிலத் துருப்புகளின் எதிர்ப்பைப் பற்றிய குறிப்பு நாடெங்கும் அறிந்த செய்தியாகும். அது பிரஞ்சுக்காரர் எடுத்துக் காட்டுவதுபோல் படுதோல்வி என்று நம்பப்பட்டு வந்தது. மக்புசுகான் பஸ்ஸாலட் ஜங் பாண்டிச்சேரி அரசு முதலியவர்களிடமிருந்து அடிக்கடி கடிதங்கள் பெற்றுக் கொண்டிருந்தான். பிரெஞ்சுக்காரர் விரைவிலேயே ஆங்கிலேயரிடமிருந்து கர்நாடகத்தைக் கைப்பற்றிவிடுவார்களென்றும் நவாபு பதவியிலிருந்து அவனுடைய உடன்பிறந்தானாகிய மகமதலி நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு அவனையே நியமிக்கப் போவதாகவும் அக்கடிதங்கள் உணர்த்தி, அவனை மேன்மேலும் ஊக்குவித்தன. இக்கடிதப் போக்குவரத்தையும் எதிர்ப்பார்ப்புகளையும் பற்றிப் பூலித்தேவர் திருவாங்கூர் அரசனுக்குத் தெரிவித்தார். அன்றியும் ஆங்கிலேயரை அவன் விட்டுவிட்டு அவர்களுக்குப் பகையாக மக்புசுகானுடன் சேர்ந்து கொண்டால் தனக்குட்பட்ட திருநெல்வேலி நாட்டிலுள்ள எந்த மாவட்டங்களை வேண்டுமானாலும் வாய்ப்புகளுக்கேற்றபடி கொடுப்பதாகவும் எழுதியிருந்தான். திருவாங்கூர் அரசன் உடனே இந்தப் பத்திரங்களை முகம்மது யூசுபிடம் காண்பித்துத் தன் நோக்கப்படி இதுவரை நவாபின் ஆட்சியால் வெறுப்படைந்திருப்பதால் களக்காட்டையும் அதை அடுத்த மாவட்டங்களையும் தன்னிடம் ஒப்புடைக்கும்படிக் கட்டாயப்படுத்தி னான். அதற்காகவே அதுவரை அவன் நவாபு அரசிடம் மனநிறைவு பெற்றிருந்தான். மேலும் அவர் உரிமை பாராட்டும் அதிகமான இடங்கள் அவன் உதவியினால் பிடிக்கப்பட்டிருக்கிறதென்றும் அவனுக்கு ஒருவனால் மறுக்கப்பட்டது உடனடியாக விருப்போடு இன்னொருவனால் கொடுக்கப்படுமென்றும் கூறினான். அதுவும்