பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197 கால்டுவெல்

அது அமைந்திருந்தது. நவம்பர் 20 ஆம் தேதி ஐந்து அல்லது ஆறு ஆயிரம் கூலிப் படைகள் பட்டப்பகலில் திருவாங்கூர் படையின் பாசறையைத் தாக்கின. மகமது யூசுபு முதலில் இதை அறிந்த உடனேயே அவனுடைய குதிரைப் படையை அனுப்பிவிட்டு மற்ற சிப்பாய்களுடனும் காலாட்படையுடனும் அவர்களைப் பின் தொடர்ந்தான். மகமது யூசுபுகான் செல்வதற்குள் கூலிப்படைகள் திரும்பிவிட்டன. கூலிப்படைகளுக்குண்டான சுறுசுறுப்பும், நாட்டின் பருக்கைக் கற்களும் சேர்ந்து அவர்களைத் தொடர்ந்து விரட்டிச் செல்வதைப் பயனற்றதாக்கிவிட்டன. கூலிப்படைகள் செல்வதற்கு முன் நூறு திருவாங்கூரர்களைக் கொன்றுக் காயப்படுத்தினர். இச்சிறு சண்டைக்கு ஒன்றிரண்டு நாட்கள் கழித்து, சிறிது மருந்துடன் மூன்று பீரங்கிகளும் குண்டு மருந்துகளும் அன்ஜன்கோவிலிருந்து மகமது யூசுபுக்குக் கிடைத்தன. அதேபோல் இரண்டு ஆறு பவுண்டு குண்டுகளுடைய துப்பாக்கிகள் குண்டு மருந்துகளுடன் வந்து சேர்ந்தன. பிறகு அவன் தன் படையுடன் புறப்பட்டான். டிசம்பர் 4 ஆம் தேதி பூலித்தேவரைச் சேர்ந்த வாஷின் எல்லூரை (வாசுதேவ நல்லூரை) நோக்கிச் சென்றனர். இது நெல்லித் தங்கவில்லி (நெற்கட்டுஞ் செவ்வல்) கோட்டை தவிர அவன் கோட்டைகளுள் மிக்க வலிமை வாய்ந்த கோட்டையாகும். இது நெல்லித் தங்கவில்லியிருந்து வடமேற்காக 20 மைலிலும் அதே திசையில் ஊத்துமலையிலிருந்து பன்னிரண்டு மைலிலும் அமைந்துள்ளது.

யூசுபுக்கு வந்த கட்டளை

'வாசுதேவ நல்லூர் பெரிய தொடர்ச்சி மலைகளிலிருந்து மூன்று மைலுக்குள் அமைந்திருந்தது. அதன் அடிவாரத்தில் அடர்த்தியான காடு ஒன்று இருந்தது. சமவெளியில் இரண்டு மைல் பரவி, கோட்டையின் மேற்கு தெற்குப் பாகங்களிலிருந்து 3900 அடி தூரம் வரை இக்காடு நிரம்பியிருந்தது. இதற்கு மாறாக வடக்கு கிழக்குப் பாகத்திலுள்ள சேய்மை இடங்கள் யாவும் செழிப்பான வயல் நிலங்களால் சூழப்பட்டிருந்தன. சில ஆயிரக் கணக்கான மக்களின் இருப்பிடமாகிய மிகப் பரந்த பேட்டை நாற்பது மூவடிக்குள் ஆரம்பித்து சுவர்களின் வடகிழக்குப் பாகம் வரை 3600 அடி விரிந்திருந்தது. பல அடர்ந்த முள்வேலி அரண் பேட்டையையும் கோட்டையையும் சூழ்ந்திருந்தது. கோட்டையின் நீளம் 1950 அடி, அகலம் 900 அடி அது மண்ணால் கட்டப்பட்டிருந்த போதிலும் செங்கல் கோட்டையைப் போல் உறுதி வாய்ந்ததாயிருந்தது. அதில் நான்கு பெரிய சதுரக் கோட்டைகள் ஒவ்வொரு கோணத்திலும் இருந்தன. அநேக சிறிய கோட்டைகள்