பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 200

படையுடனும் தொண்டைமானால் அனுப்பப்பட்டவர்கள், மறவர்கள் ஆகியவர்கள் சூழ திருநெல்வேலி நகரத்திற்குத் திரும்பினான்.

1760 ஆம் ஆண்டில் திருநெல்வேலி நாட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. படைத்தலைவன் மகமது யூசுபுகடந்த ஆண்டின் இறுதியில் வாசுதேவநல்லூரில் ஏற்பட்ட தோல்விக்குப் பின் துப்பாக்கி வெடிமருந்து தேவையால் பாளையக்காரர்களின் வலிமை வாய்ந்த இருப்பிடங்களைத் தாக்கத்தக்க நிலையில் இல்லை. எனவே மருந்து அனுப்பப்படும்வரை அவனுடைய படையின் பெரும்பகுதியைப் பூலித்தேவரையும் மேற்குப் பாளையக்காரர்களையும் அடக்க நிறுத்தியதோடு மனநிறைவு அடைந்தான். எனினும் திருநெல்வேலியில் எஞ்சிய படையுடன் தங்கிக் கட்டபொம்மநாயக்கன் கிழக்குப் பாளையக்காரர்கள் முதலியவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். ஜனவரி மாதத்தில் நெல்லித்தங்கவில்லியிலிருந்து (நெற்கட்டுஞ் செவ்வலிலிருந்து) மகமது யூசுபு புறப்பட்டது நவாபின் அதிகாரத்தை எதிர்த்து அவனுடைய மூத்த உடன்பிறந்தானின் உரிமையை ஆதரித்துப் பூலித்தேவரும் அவன் படையினரும் செய்த போலிச் செயலைத் தொடர வேண்டிய தேவையில்லாது போயிற்று. மகமது யூசுபோடு உடன்படிக்கைச் செய்து கொள்வதா அல்லது நவாபால் அவன் உடன்படிக்கைப்படி தக்க அமைதியான முறையில் (சுமுகமாக) வரவேற்கப்படாவிட்டால் அவர்கள் எதிர்பார்த்தபடி அவர்களுடன் சேர்ந்து கொள்ள மக்புசுகான் பயணத்திலிருந்து திரும்பிவரும்வரைக் காத்திருப்பதா என்று அவர்களுக்குள் விவாதித்தனர். இந்த உறுதியில்லா எண்ணங்களால் அவர்கள் விரைவான சிந்தனைகளைச் செய்யாது மகமது யூசுபுனுடைய இருப்பிடங்களிலிருந்து எவ்வளவுப் போக்குக் காட்டித் தப்பிக்க முடியுமோ அவ்வளவு தப்பித்துக் கொண்டு, பகலில் வெளிப்படையாக ஒரு முயற்சியும் செய்யாது இரவில் தங்கள் கூலிப்பட்டாளங்களைக் கொண்டு கொள்ளையடித்து வந்தனர். இக்கொள்ளைகள் விளை நிலங்களுக்கு மிக்க அழிவை ஏற்படுத்தின. அதனால் மகமது யூசுபு அவர்களைச்சார்ந்தவர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்துக் கம்பெனி வேலைக்குச் சிறந்த உழைப்பாளிகளாக ஏற்றுக் கொள்வது தகுதியுடையது என எண்ணினான். ஏப்பிரல் இறுதியில் இந்தப் பல சிறு சிறு தலைவர்கள் தங்களைச் சேர்ந்தவர்களுடன் மொத்தத்தில் 2000 எண்ணிக்கையுள்ள கூலிப்படைகள் திருநெல்வேலியில் அவனுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் எதற்காக நியமிக்கப்பட்டார்களோ அந்தக் கடமைகளை உண்மையுடன் செய்வதில் ஈடுபட்டார்கள். மே இறுதி வரை எந்தவிதமான ஒழுங்கான போரும் நடைபெறவில்லை.