பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 210


இரக்க மற்ற தன்மையால் அவனுடைய எந்தச் செயலையும் மன்னிக்க இயலாது ; அவனை ஒரு நாயைப் போலத் தூக்கிலிட்டனர். அவன் அலுவலின் முடிவு, சென்ற ஆண்டில் முற்றுகை ஆரம்பிக்கப்பட்டபோது ஜெனரல் லாரென்சுக்கு அறிவிக்கப்பட்ட குறிப்புகளுடன், ஒத்திருக்கலாம். அவர்கள் கூறியதாவது, யூசுபு உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால் - இரக்கம் காட்டப்படுவதற்காக அல்ல ஆனால் நிதானமாக அவனுக்குப் பொருத்தமான சரியான முறையில் அவனை ஒழிப்பதற்காகவே, அவனை மதராசுக்கு அனுப்ப வேண்டுமென்பது அவர்கள் விருப்பம்'.

கான்சாகிப் தூக்கிலிடப்பட்டான்

'நாங்கள் உங்களிடம் வருந்திக் கூறுவதாவது, நவாபு அவனை மாநிலக் கைதியாக்க வேண்டுமென எண்ணங் கொண்டிருந்ததால் நவாபிடம் அவனை ஒப்படைப்பது மிகுந்த ஆபத்திற்கிடமானது. ஆனால் உங்களுக்குச் சம்மதமானால் இராணுவத் தலைவரிடம் கூறிப் படையினருக்கு எதிரே முதலில் காணப்படும் மரத்தில் அவனைத் தூக்கிலிட்டால் அதுவே எங்களுக்கு அதிக மனநிறைவைத் தரும். ஆதாரப் பூர்வமான சாட்சியங்கள் காணப்படாததால் பிந்தியவரின் வேண்டுகோளின்படி நிகழ்ச்சி நடந்திருக்குமென நான் எண்ணுகிறேன். அத்தகைய பெருமை வாய்ந்த மனிதன் அவ்வளவு இழிவான ஒரு முடிவை எய்தினான் என்பதை நம்புவது கடினமாகத்தானிருக்கிறது. ஆயினும் அவன் குழப்பத்தை ஆரம்பித்த போதே இந்த முடிவும் அவனது மனதில் தோன்றிய முடிவுகளில் ஒன்றாய் இருந்திருக்கவும் கூடும். அவன் எதிர்ப்பில் வெற்றியடைந்திருந்தால், அவன் ஓர் இளவரசனைப்போல ஆட்சி செய்ய எண்ணியிருக்க வேண்டும். தோற்றுவிட்டால் தேசத்துரோகம் எனத் தூக்கிலிடப்படலாம் என்பதையும் எண்ணிப் பார்த்திருக்கக் கூடும். கான்சாகிப் மதுரைக்கு மேற்கே இரண்டு மைல் தூரத்திலுள்ள பாசறைக்கருகே தூக்கிலிடப்பட்டான். அவன் தூக்கிலிடப்பட்ட இடத்திலேயே புதைக்கப்பட்டான். மகமதிய முறையில் அதன் மேல் ஒரு சிறு கல்லறைக் கோபுரமும் கட்டப்பட்டது. அதில் 'கான் சாகிபின் கல்லறை' என்ற வாசகமும் விளக்கம் தரப் பொறிக்கப்பட்டது. கான்சாகிபினுடைய சிற்றப்பனாகிய மதுரைவாசியான திறமையுடைய மகமதியன் ஒருவன் அந்த இடத்திற்கு என்னுடன் வந்தான். கான்சாகிபின் இறப்பைப் பற்றி அவன் தன் முன்னோர்களின் வாயிலாகக் கேட்டறிந்த அநேக செய்திகளைக் கூறினான். மகமது யூசுபு கடவுளைத் தொழுது கொண்டிருக்கும் போது முசுமுர்சன்டும் (மான்சியர் மர்ச்சண்ட்)