பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 224


கோட்டையின் பெயர் கொடுக்கப்படவில்லை. ஆனால் பாளையக்காரனின் பெயர் காம்போ நாயக (Cambo Naig) என்று சொல்லப்படுகிறது. அப்பெயர் அநேகமாய் காமைய நாயகா (Kamaiya Nayaga)வைக் குறிக்கலாம். ஆகஸ்டில் திருச்சிராப்பள்ளியிலுள்ள கர்னல் உட் (Calonel Wood) டுக்குப் படை உதவி அனுப்புவதற்காகத் துருப்புகளையும் துப்பாக்கிகளையும் அனுப்பும்படி கட்டளையிட்டான். ஆனால் அவனால் இக்கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் சுமார் எட்டு ஒன்பது ஆயிரம் கூலிப் படைகள் ஒன்று சேர்ந்து கொண்டு தங்களுக்குள் உள்ள சில குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வதாகப் பாசாங்கு செய்து கொண்டு உண்மையில் சர்க்கார் மாவட்டங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தன. அக்டோபர் 24 ஆம் தேதி ஒழித்துக் கட்டிய சிவகிரி பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் ஒற்றர்கள் அந்த மாவட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதாக முறையிட்டிருந்தான். இந்த இரண்டு பாளையக்காரர்களும் அப்பொழுது இராமநாதபுரம் அரசரின் நாட்டில் இருந்து வந்தனர். அவர்களுடைய திட்டங்களுக்கான உதவியை அந்த ராஜாவிடமிருந்தே பெறுவதாக ஊகிக்கப்பட்டது. எனவே இதன்படி அரசாங்கத்தினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்காக அரசை எச்சரித்துக் கடிதம் எழுதினர்.

1769 இல் காப்டன் பிரெளன் ஹைதர் அலிக்கு எதிராகப் போரிடும்படி பாளையக்காரர்களைத் தூண்டினான். முதலில் அவர்கள் விசுவாசத்துடன் நடந்து கொண்டதாகத் தெரிந்தது. ஆனால் பின்னால் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டனர். நவாபினுடைய படைகள் அவமானம் தரத்தக்க நிலையில் நடந்து கொண்டதாக அவன் குறைப்பட்டுக் கொண்டான்.

1770 இல் குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் நிகழவில்லை. 1771 இல் காப்டன் பிரெளன் அவனுடைய படையுடன் சென்னைக்கு அழைக்கப்பட்டான். அவன் இடத்திற்குக் காப்டன் கூக் (Cooke) நியமிக்கப்பட்டான். திரு. கம்மிங் (Mr. Cumming) என்பவன் சம்பளம் கொடுப்போனாகவும் பண்டக சாலைப் பாதுகாவலனாகவும் நியமிக்கப்பட்டான்.

தபால் போக்குவரவு ஆரம்பம்

இந்த ஆண்டில் திருநெல்வேலி கச்சேரி அதிலிருந்த எல்லா ஆவணங்களுடனும் எரிக்கப்பட்டது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் சென்னைக்கும்