பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 230


டச்சுக்காரரிடம் திருநெல்வேலி ஒப்படைக்கப்படுதல்

1781 இல் அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ஹேஸ்டிங்ஸ் டச்சுக்காரர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சித்தார். இந்த ஒப்பந்தம்மட்டும் வெற்றி பெற்றிருந்தால் திருநெல்வேலி ஒரு டச்சு மாவட்டமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும். இந்த மாறுதல் கொழும்பு, கொச்சி, கவர்னர்களின் மூலம் கர்நாடகத்திலிருந்து ஹைதரை வெளியேற்றப்படையுதவி பெறலாமென்பதற்கே ஆகும். ஆனால் இந்த கவர்னர்கள் படேவியா (Batavia) அரசாங்கத்தின் உத்தரவுப்படி நடப்பவர்கள். அவர்களுடைய உத்தரவு வரும்வரை காலந்தாழ்த்த முடியாமையால் வாய்ப்பான நன்மையை எடுத்துக்காட்டி அத்தகைய வழக்கத்திற்கு விரோதமானப் பொறுப்பைத் தாங்களே மேற்கொள்ள வேண்டிய முக்கியத்தை உணர்த்தினர். இந்த ஒப்பந்தகளெல்லாம் வங்காளத்திலுள்ள டச்சு குடியேற்ற நாடுகளின் நிர்வாகியின் உதவியால் நடைபெற்றன. இதன்படி 1000 ஐரோப்பிய கால்படை, 200 ஐரோப்பிய பீரங்கிப் பட்டாளம், 1000 மலாய்காரர்கள் (பிரிட்டிஷ்காரிடம்) வேலை செய்யும் காலத்தில் அவர்களுக்குச் சம்பளம் கொடுத்து கம்பெனிக்காரர்கள் காக்க வேண்டும் திருநெல்வேலி மாகாணம் டச்சுக்காரர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்படவேண்டும். அதோடு கொச்சிக்கு அருகேயுள்ள இடங்களை வெற்றிபெற விடுதலை அளிக்க வேண்டும். இராமேசுவரத்திற்குத் தெற்கேயுள்ள கடற்கரை முழுவதிலும் முத்துக்குளிக்கும் தனியுரிமை கொடுக்கப்பட வேண்டும். பெயரளவிலும் தோற்றத்திலும் நவாபு முகம்மது அலியினுடைய நாடு குலையக்கூடாது என்றும் அவனுக்காகத் தயாரிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அவன் கையெழுத்திட்டு ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஒப்படைத்தலின் சிறுபயனும், கர்னாடகத்திற்கு ஏற்பட்ட எல்லை மீறிய ஆபத்து இவைகள், நவாபும். சென்னை அரசாங்கத்தினரும் இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதற்கான தூண்டு கோல்களாகக் காட்டப்பட்டன. எதைக் கொடுப்பது எதை எடுத்துக் கொள்வது என்ற விஷயத்தில் நவாபினுடைய நோக்கமும் சென்னை அரசாங்கத்தின் நோக்கமும் கவர்னர் ஜெனரலுடைய நோக்கமும் மிக மாறுபாடுடையதாக இருந்தது. இவர்கள் திருநெல்வேலியின் மீது அதிக மதிப்பு வைத்திருந்ததுமன்றி அவர்களுக்குப் படைகள் மிகத் தேவையாக இருக்கும் போது படைகள் கொடுத்துதவுவதைவிட அவர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் காப்பதென்பது லாபக் குறைவான செய்கை என எண்ணினர். இறுதியில் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள