பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

233 கால்டுவெல்


கம்பெனியின் மேற்பார்வையிலும் அதிகாரத்திலும் விட்டுவிட்டார். அதே சமயத்தில் அரசாங்கத்தாரின் அறிவிப்புகளின் பிரதி ஒன்று கமிட்டியின் வழிகாட்டியாகக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் சென்னை கவர்னராக இருந்தவர் கனம் மகார்ட்னே. இந்தத் திட்டத்தின்படி அலுவலர்கள் முதலில் வரையறுக்கப்பட்ட ரெவின்யூ ரிலீவர்கள் (வரிவசூல் செய்பவர்கள்) என்றும் பின்னர் வரையறுக்கப்பட்ட ரெவின்யூ சூப்பிரின்டண்டுகள் (வரிவசூல் மேற்பார்வையாளர்கள்) என்றும் பொதுவாக அழைக்கப்பட்டனர். இவர்கள் உள்நாட்டில் செயல்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட முதல் சிவில் அலுவலர்கள். நாம் ஆராய்ந்து கண்டவாறே இக்காலம் வரை நவாபின் வரித் தொகையை வசூல் செய்வதாகிய உள்துறை நிர்வாகம் ஒன்றையே ஆங்கிலேய அரசாங்கம் செய்து வந்தது. அதுவும் மாவட்டங்களில் துருப்புகளை வைத்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரிகளால் வசூல் செய்யப்பட்டது.

இந்தப் புதிய ஒழுங்குமுறை நாடு பல வழிகளில் வளமடைவதற்கான வாய்ப்புகளைத் தரும் என்று அரசாங்கத்தினர் எதிர்நோக்கினர். கமிட்டிக்கு அனுப்பப்பட்ட அறிவிப்புகளின் இறுதியில் கீழ்காணுமாறு கூறியிருந்தனர். “இந்தக் குறிப்புகளைக் கவனிப்பதன் மூலம் கம்பெனிக்காரர்கள் பயன்தரத்தக்க அறிவு பெறலாம். அவர்களால் படிப்படியாக நாட்டை அடக்குமுறையினின்றும் விடுதலை செய்ய இயலும், அதன்மூலம் இன்றுள்ள மிக இரங்கத்தக்க நிலையினின்றும் நிலங்களையும் உற்பத்திப் பொருள்களையும் மீட்க முடியும். அதனால் அதிகப்படியான வரி வருமானம் வளர வழி ஏற்படும். இறுதியில் செல்வம், வருவாய், செழுமை முதலியனவற்றை நாடெங்கும் நிலைநாட்ட முடியும்." அரசாங்கத்தினரின் இந்தக் கொள்கையின் நோக்கு நவாப் அரசாங்கத்தினரின் நோக்கத்திற்கு முழுதும் மாறுபட்டிருந்தது என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

முதல் 'திட்டமிட்ட வரிவசூல்பவர்(Receiver of Assigned revenue) ஆக நடைமுறையில் முதல் திருநெல்வேலி கலெக்டராக திருநெல்வேலியில் நியமிக்கப்பட்டவர் உயர்திரு. ஜியார்ஜ் புரோக்டர் (George Proctor) ஆவர். அவர் சென்னையின் கணக்கு தணிக்கையாளராக இருந்தார். பிறகு திட்டமிட்ட வரிவசூல் குழுவில் அங்கத்தினராகப் புதிதாய் நியமிக்கப்பட்டார். திருநெல்வேலியில் வரிவசூலிப்பவராக அவர் நியமிக்கப்பட்டதைத் தெரிவித்து லார்ட் மகார்டினே (Lord Macartney) எழுதிய கடிதத்தில் 1781 ஆம் ஆண்டு டிசம்பர் எட்டாம் தேதி இடப்பட்டிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு வந்த