பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 236


கமிட்டி வந்ததிலிருந்தே புரோக்டாரின் நிர்வாகத்தில் கமிட்டிக்குள்ள மனக்குறை வெளியாகியது. ஆகவே, அரசாங்கத்தாரால் முதலில் கொடுக்கப்பட்ட வழிகளைத் திரும்பவும் கடைப் பிடிக்கத் தீர்மானித்து, அதன் படி பல உரிமை மாற்ற நாடுகளுக்குக் கமிட்டி அங்கத்தினர்கள் அடங்கிய ஒரு தூதுக் குழு அவ்வப்போது புறப்பட்டுச் சென்று கவனிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இந்த மேல் விசாரணை தற்காலிகமாயிருப்பதால் அது விருப்புவெறுப்பற்ற நிலையை நிரூபிக்கும் என்று அவர்கள் எண்ணினர். அந்தக் குற்றமொழி புரோக்டாரை மிக அதிகமாகத் தாக்கியது. அன்றியும் இதுவரை உள்நாட்டில் வேலை பார்த்து வந்த ஐரோப்பிய அதிகாரிகளையும் சேர்த்துத் தாக்கியது. இந்தத் தற்காலிக மேல்விசாரணை அவர்களை எந்தவிதமானப் பண வரவுசெலவுகளிலும் தலையிடவோ அல்லது நாட்டிலுள்ள சதித்திட்டங்களில் சேரவோ வாய்ப்பளிக்காது. அன்றியும் கம்பெனி அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள எல்லாவகையான ஐரோப்பிய மேற்பார்வைகளுக்கும், கமிட்டி விரோதமாக இருக்கிறது என்ற கருத்திற்கும் இடமில்லாமல் போகும். கமிட்டியிலிருந்து தூதுக்குழுவுடன் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்ட பிரதிநிதி உயர்திரு. ஜல்ஸ் இர்வின் (Mr. Eyles Erwin) ஆவர். ஆனால் அவருடைய பதவி நியமனம் 1783 இல் நடந்த சம்பவங்களுள் ஒன்றாக அமைந்தது.

1782 டிசம்பரில் சென்னையில் திரு. புரோக்டர் இல்லாத நேரத்தில் அவனுடைய உதவியாளர் திரு. ஆர்பன், ஊதியம் வழங்குபவர் திரு. லைட் (Mr. Light), படைத்தலைவன் காப்டன் பில்கிளிப் (Captain Bilcliffe) ஆகியவர்கள் குத்தகைக்காரனுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு கேட்டு எழுதியிருந்தனர்.

புதிய அதிகாரியாக இர்வின் நியமனம்

1783 ஜனவரி 27 இல் பாளையங்கோட்டையிலிருந்து சென்ற மாதத்தில் எழுதிய கடிதத்திற்குக் கமிட்டி பதில் எழுதியது. அதில் அவர்கள் திரு.இர்வின் வந்துசேரும் வரை தாமதிக்க வேண்டுமென்றும், திருநெல்வேலியிலுள்ள அவர்களுடைய நிர்வாகத்திலுள்ள எல்லா வேலைகளையும் அவரிடத்தில் ஒப்படைக்கத் தீர்மானித்திருப்பதால் பொறுத்திருக்கும்படி எழுதியிருந்தனர்.

ஜனவரி 28 இல் வரி உரிமை மாற்றத் திட்டக் கமிட்டியிலிருந்து முழு அதிகாரத்துடன் இர்வின் திருநெல்வேலி நோக்கிப் புறப்பட