பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241 கால்டுவெல்


வரிப்பணம் எதிரிகளால் வலிந்து கொடுமையாக வாங்கப்பட்டன. துருப்புகளின் கட்டுப்பாடு அவர்களை விட்டகன்றது. குறைந்த சம்பளமும், குறைந்த உணவும் வழங்கப்பட்டு வந்தன. படைகளுக்கு இட்ட ஆணைகள் தோல்வியடைந்துள்ளன. இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நேரத்தில் உங்கள் தென் மாகாணங்கள் பழைய குழப்ப நிலையிலேயே இருந்தது. போர் தொடங்கியதிலிருந்து பாளையக்காரர்கள், கூலிப்பட்டாளங்கள், மற்ற கப்பங்கட்டுபவர்கள் ஆகியவர்களுக்கிருந்த தலைவர் பற்றுகள் தலைக்காட்டாமல் தூக்கியெறிப்பட்டன. இராணுவத் துணையின்றி சமூக ஒழுங்குகளை நிலைநாட்ட இயலவில்லை. அன்றியும் அவர்களை அடக்குவதற்கு முழுப்படையும் போதுமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. தென் மாகாணத்தின் கணிசமான ஒருபகுதி கம்பெனி அரசாங்கத்திற்கு எதிராக இருக்கும்போது, அமைப்புகளில் தற்கால குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதென்பதைப் பற்றி எண்ணுவதே பயனற்றது. அதைவிட வரி பாக்கிகளைக் குறைப்பதோ, புதிய தாக்குதல் எதுவும் திரும்ப ஏற்பட்டால், முக்கியமான நடைமுறைச் செயல்களுக்குத் தயாராதலோ, எதையும் நம்மால் நம்பவே இயலாது. ஆகவே அந்த மாகாணங்களில் கடுமையான இராணுவ நடவடிக்கைகளின் மூலம் அமைதி நிலைநாட்ட வேண்டியது இன்றியமையாததாகிவிட்டது. ஏனெனில் வரியைப் பெருக்கும்படி அவர்களைத் தூண்டச் செய்யக் கூடிய வழி அது ஒன்றேயாகும்.

மேலுர் சிவகங்கை பாளையக்காரர்களை அடக்கிக் கீழ்ப்படியச் செய்தபின் கர்னல் புல்லர்ட்டன் தென்பகுதி நோக்கிப் படையெடுத்துச் சென்றான். அடுத்தாற்போல் அங்கு மற்றொரு முக்கியமான ஏற்கெனவே மேற்கொண்டிருந்த காரியம் ஒன்று காத்திருந்தது. போர் தொடங்கியவுடன் கலகம் செய்த பல திருநெல்வேலி பாளையக்காரர்கள் தினந்தோறும் மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை கொள்ளையடித்து வந்தனர். அவர்கள் கோட்டைகளைத் தங்களுக்குக் கீழ்ப்படுத்திக் கொண்டனர். சர்க்காருக்குச் சொந்தமான அல்லது அவர்களுடைய உரிமையிடங்களல்லாத பிறர்க்குரிய மாவட்டங்களையும் தங்கள் உறைவிடங்களாக்கிக் கொண்டனர். அமைதியை நிலைநாட்டவும் வரி வருமானத்தை மீட்கவும் பாளையக்காரர்களை எதிர்த்துச் செல்லும்படி மதுரை திருநெல்வேலி சூப்பிரண்டாக இருந்த இர்வினால் அடிக்கடி தூண்டப்பட்டேன். வலிமையுடைய பாளையக்காரர்கள் உங்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, டச்சுக்காரருடன் சேர்ந்து கொண்டு 12 அல்லது 14 ஆயிரம் ஆட்களுடன் கூடி மாகாணத்தில் வடமேற்கு எல்லையாக