பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 242


அமைந்திருந்த குன்றுகளின் அடிவாரத்திலிருந்த சிறிது வலிமையுடைய பாளையக்காரர் இடமாகிய சொக்கம்பட்டி கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த அந்தச் சூழ்நிலையில் அந்தப் பகுதிகளில் நான் படையெடுத்துச் செல்ல அதிகாரம் பெற்றது இதுதான் முதல் தடவையாகும்.

திருநெல்வேலி நோக்கி நாங்கள் படையெடுக்க வேண்டுமென்று தீர்மானித்தவுடன் கர்னல் ஸ்டூவர்ட் (Stuart), எல்பின்ஸ்டன் (Elphinstone) படைகள் திண்டுக்கல்லை அடையும் இடைக்காலத்தை வீணாக்காது திடீரெனப் பாளையக்காரர்களை எதிர்பாராமல் தாக்கிச் சரணடையும்படி பல வழிகளிலும் அச்சுறுத்த வேண்டுமென்பது என் நோக்கம். சிவகிரியைத் தவிர திருநெல்வேலித் தலைவர்களில் எல்லாம் வலிமைவாய்ந்தவனும் குற்றமிழைப்பவனு மாயிருந்தவன் கட்டபொம்மநாயக்கன். அவன் சொக்கப்பட்டி முற்றுகையில் நேரடியாகப் பங்கு கொண்டிருந்தான். அங்கிருந்து திருநெல்வேலியின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள அவனுடைய பாஞ்சாலங்குறிச்சி 70 மைலுக்கு மேற்பட்ட தூரத்தில் இருந்தது. திருநெல்வேலிக்கு வழக்கமானப் பாதை மதுரை வழியாகச் செல்கிறது. நாங்கள் சிவகங்கையை நோக்கிச் செல்வதை அறிந்த பாளையக்காரர்கள் அந்த வழியில் எங்களை எதிர்பார்த்திருந்தனர். இந்த எண்ணத்தை வலுப்படுத்துவதற்காக மதுரையில் படைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கட்டளையிட்டு என்னுடைய உண்மையான எண்ணம் முழுவதையும் மறைமுகமாக வைத்திருந்தேன். பிறகு ஆகஸ்டு 8 ஆம் தேதி மாலை சிவகங்கையிலிருந்து 20 மைல் தூரத்தில் மேலுர் நாட்டின் தென் எல்லையில் உள்ள (திருப்பி செலுத்தி) திருப்பாச்சேத்தி நோக்கிப் புறப்பட்டோம். நான் அங்கிருந்த எஞ்சியப் படையுடன் சேர்ந்து கொண்டேன். அங்கு 7 வது அணியையும் சில படைப் பயிற்சியற்றவர்களையும் மேலுரில் கூலிப்பட்டாளத்தை எதிர்க்க விட்டுவிட்டு மறுநாள் காலை நாங்கள் பள்ளிமடை, பந்தல்குடி, நாகலாபுரம் வழியாகச் சென்று நான்காம் நாள் சிவகங்கையிலிருந்து 100 மைல் தூரத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை அடைந்தோம். (பாரன்ஹீட் உஷ்ணமானி இப்படையெடுப்பின் போது அடிக்கடி 110 வெப்ப நிலைக்கு மேலேயே இருந்தது.) (ஆங்கிலேயர் ஆதிக்கத்திலும் ஆதவன் கொடுமை - ந.ச.) படை கோட்டையை நெருங்கிய உடனே அவர்களுடைய வாயிலைத் திறந்துவிட்டு எங்களுடன் கலந்தாலோசிக்க வரும்படி சமாதானக் கொடி அனுப்பப்பட்டது. அவர்கள் மறுத்து விட்டனர். ஆகையால் பின்புறத்தில் வடகிழக்குக்