பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

245 கால்டுவெல்


பாளையக்காரர்களுள் மிக்க வலிமை வாய்ந்தவனுடைய அந்தக் கோட்டை கைப்பற்றப்பட்டதுடன் பாஞ்சாலங்குறிச்சி வீழ்ச்சியும் சேர்ந்து, குறைந்த குற்றங்கள் செய்தவர்களுக்கு அச்சமூட்டியிருக்க வேண்டுமெனவும் அவரவர் செய்த தகாத செயல்களுக்குத் தக்கவாறு அவர்கள் நடத்தப்படுவார்கள் என்பதை அம்மொத்தக் கூட்டத்தினருக்கும் அந்நிகழ்ச்சி மெய்ப்பித்திருக்க வேண்டுமென்றும் நம்பப்பட்டது. மேலும், சிவகிரி தலைவனால் செய்யப்பட்ட கொடுமைகள் மிக்க அநீதியானவை. உங்கள் அதிகாரத்திற்கு முழுமையாக அவன் பணிந்தால் அன்றி அவனை மன்னிக்க இயலாது. அவன் கொடூரமாகக் காப்டன் கிரகாம்பெ ல்லைக் கொலை செய்தான். அவர் தலைமையின் கீழிருந்த படையை ஒழித்துக் கட்டினான். முந்திய சூழ்நிலைகளில் அவன் பல படைகளைத் தாக்கியிருக்கிறான். வெளிப்படையாக உங்கள் பகைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தான். அப்பகைவர் சிவகிரி கோட்டையில் பாதுகாப்புடன் இருப்பதாய் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். கொழும்பிலிருந்து எதிர்நோக்கியிருந்த டச்சுப் படைக்குத் தேவையானப் பாசறை வசதிகளைத் தேடி வைத்தான். இவையேயன்றி, மிகக் கடினமான முற்றுகைக ளையும் எதிர்த்து நின்றான். ஏனெனில் அவனுக்குத் தன் கோட்டையை முற்றுகை இடுவார்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை. அவன் நடவடிக்கைகளின் ஒவ்வொரு சூழ்நிலையும் தான் இராணுவ பலத்தையும் மீறின வலிமையுடையவன் என்ற அவனது எண்ணத்தை உணர்த்திற்று. சிவகிரி நகரத்தை நாங்கள் அடைந்ததும் எதிரிலிருந்த அடர்ந்த கம்பெனியின் காட்டுக்குள் 4 மைல் தூரம் படைகள் ஓடிவிட்டன. (காம்பெயின் தமிழில் கம்பாய். அகராதியில் அதன் பொருள் மலைகளிலுள்ள ஒரு கோட்டை. காட்டிலுள்ள ஒரு காப்பு அரண்) அக்காடுகள் கோட்டையை மறைத்துக் கொண்டிருப்பதன்றிக் கோட்டைக்குப் பாதுகாப்பாகவும் இருந்தது. காட்டையும் திறந்த வெளியான நாட்டையும் பிரிக்கின்ற பலம் வாய்ந்த அரண் முழுவதையும் அவன் பலப்படுத்தினான். அவனுடன், கட்டபொம்ம நாயக்கனும் அவனுடன் சேர்ந்த பாளையக்காரர்களும் சேர்ந்து கொண்டனர். எட்டாயிரம் அல்லது ஒன்பது ஆயிரம் படைக் கலன்கள் தாங்கிய ஆட்களைச் சேர்த்தனர். இந்நிலையில் இரக்கம் காட்டினால் அச்செய்கை நமது வலிமைக் குறைவாகக் கருதப்படும். ஆனால் கர்னல்கள் ஸ்டுவர்ட், எல்பின்ஸ்டோன் இருவரும் திண்டுக்கல் வந்து சேர்ந்ததும், ஏற்கனவே ஏற்பாடாகியிருந்த வசதி களைச் செய்ய திப்பு சுல்தான் மறுத்ததும், எதிரியினுடைய எல்லையை நோக்கி விரைவாகப் படையெடுத்துச் செல்வதற்காக இந்தப் பாளையக்காரர் சண்டைகளை முடித்துவிடவேண்டுமென்று எனக்கு அளவு கடந்த ஆவலைத் தூண்டியது. எனவே,ஏறக்குறைய