பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

257 கால்டுவெல்


இடத்தில் அப்பயிர் அதிகப் பயன் அளிக்காது. டோரின் கொண்டுவந்து பெருக்கிய மரத்திலிருந்துதான் குற்றாலத்திலுள்ள வாசனைப் பொருள் தோட்டத்தில் (Spice Garden) இலவங்கப்பட்டை பயிரிடப்பட்டது (1791 ஐப் பார்க்க).

சம்பளப் பட்டுவாடா அதிகாரியினுடைய வீட்டை (தனது வீட்டை) 1000 பகோடாக்கள் செலவில் திருத்தியமைப்பதற்காகக் கேட்டிருந்த டோரினின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1790-பாளையங்கோட்டை உட்பட தென் கொள்ளிடக் கரையிலுள்ள எல்லா சம்பளப் பட்டுவாடா அதிகாரிகளும் கர்னல் மஸ்குருவினுடைய (Colonel Musgrove) எல்லா உத்தரவுகளுக்கும் உடனடியாகப் பணியவேண்டுமெனக் கட்டளையிடப்பட்டனர். கர்னல் மஸ்குரூவ் (கமான்டர் - இன் - சீப்பாக) தலைமைப் படைத்தலைவனாக இருந்தான். அவன் திப்பு சுல்தானால் ஏற்பட இருக்கும் படையெடுப்பை எதிர்க்கத் தயாராகிக் கொண்டிருந்தான். மாகாணப் படைகளும் ஒவ்வொரு பகுதியிலும் தயாரிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புக் காலம் (The Period of assumption)

1790 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி சென்னை அரசாங்கத்தினருக்கும் கர்நாடக நவாபுக்குமிடையே இருந்த உறவில் ஒரு புதிய காலம் தொடங்கியது. வரிவசூல் உரிமையையும் அல்லது ஆங்கிலேயர் கைக்கு பொது நிர்வாகப் பணிகளை மாற்றக் கூடிய அது போன்ற எந்தச் செயலையும் திரும்பவும் நாட்டின் நடைமுறையில் புகுத்த நவாபை இணங்கும்படிச் செய்வது இயலாததொன்று என்று உணர்ந்த அரசாங்கம் எவ்வித உடன்படிக்கையும் இன்றி அறிக்கையால் மட்டும் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது. அவர்கள் பயன்படுத்திய வாசகம் ‘நவாபினுடைய நாட்டு நிர்வாகத்தை நாங்கள் கைக் கொண்டோம்’ என்பதுதான். இக்காலம் ‘ஆக்கிரமிப்புக் காலம்’ என்று பெயர் பெறுகிறது. 1781லிருந்து 1790 வரை இருந்த ‘வரிவசூல் உரிமை பெற்ற காலம்’ என்பதற்கு நேர்மாறாக 1790லிருந்து 1792 வரை உள்ள காலத்திற்கு ‘ஆக்கிரமிப்புக் காலம்’ என்று பெயர் வழங்கலாயிற்று. 1792 ஆம் ஆண்டிலிருந்து புதிய ஒப்பந்தக் காலம் தொடங்கியது. அதே சமய த்தில் ஒரு வாரியம் (போர்டு) நிறுவப்பட்டது. இது முன்புபோலவே வரி வசூல் உரிமை போர்டு (The Board of assigned Revenue) என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்பெயர் தவறானது. இப்பெயர் நவாபின் இசைவு பெற்றது என்ற பொருளை உணர்த்துகிறது. எனவே செப்டம்பர் 28 ஆம் தேதி அரசாங்கத்தின் போர்டுக்குப் பின் வருமாறு