பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 260


திரு. டோரின் எடுத்துக் கூறியபடி அரசாங்கம் கர்னல் மாக்ஸ்வெல்லின் தலைமையில் ஒரு படையைத் திருநெல்வேலிக்கு அனுப்பத் தீர்மானித்தது இந்தப் படையெடுப்பின் முக்கியமான நோக்கம் சிவகிரி பாளையக்காரனைத் தண்டிப்பதாகும். அவன் எல்லா அதிகாரிகளையும் அறம், மனிதத்தன்மை இவற்றின் சிறப்புகளையும் அவமதித்துச் சாத்துர் பாளையக்காரரைத் தன் வேலைக்காரர்களுடன் சேர்ந்து கொடூரமாகத் தாக்கி அவனையும் அவன் குடும்பத்தினரையும் கொலை செய்தான். சிவகிரி பாளையக்காரரை மட்டும் பிடிக்க முயற்சிக்க வேண்டுமென்றும் அவனுடன் கூட்டு சேர்ந்திருப்பதாகத் தெரிந்தால் மட்டும் அன்றி வேறு எக்காரணத்திற்காகவும் பாளையக்காரர்களுக்கு எதிராக ஒன்றும்செய்யக் கூடாதென்றும் அவனுக்குக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. கூடிய விரைவில் அத்தகையதொரு சதிக்கூட்டமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கர்னல் மாக்ஸ்வெல் ஜூலை மாதத்தில் அவனுடைய படையெடுப்பை ஆரம்பித்தான். மதுரையிலிருந்து முன்னேறி வில்லிபுத்தூருக்குச் சென்றான். அங்கிருந்து சிவகிரியை நோக்கிப் போனான். சிவகிரி பாளையக்காரரின் மலை அரணாயிருந்த கோம்பையை (மலை அரண்) ஒடுக்கினான். இத்தாக்குதலில் ஸ்டீவர்ட்டு, டாரன்ஸ் (Torrens) இருவரும் மிக்க புகழ் பெற்றனர். 1783இல் கர்னல் புல்லர்ட்டன் இந்த உறுதி வாய்ந்த கோட்டையைப் பிடித்தது பற்றிய செய்திக் குறிப்பைப் பார்க்க.

பாளையக்காரர்களின் துணிச்சல்

கர்னல் மாக்ஸ்வெல் திரு. டோரினுடைய தொடர்பில் திருநெல்வேலியிலுள்ள பல பாளையக்காரர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்ய முன்னேறினான். ஆனால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளின் போக்கில் சிலவற்றில் அவர்கள் ஒத்துவரவில்லை. கர்னல் மாக்ஸ்வெல் பாளையக்காரர்களுடைய கடன் பாக்கிகளில் போர்டின் கட்டளைப்படியே சில உத்தரவுகளைப் பிறப்பித்தான். சிவகிரி பாளையக்காரனுக்கு எவ்விதப் பரிவும் காட்டப்படவில்லை. சொக்கம்பட்டி பாளையக்காரன் கர்னல் மாக்ஸ்வெல்லின் உத்தரவுகளை ஏற்க மறுத்துவிட்டான். எனவே, அவன் அதிகாரத்தினின்றும் அகற்றப்பட்டான். செந்நல்குடி பொள்ளம் தற்காலிகமாகக் கைப்பற்றப்பட்டது. கர்னல் மாக்ஸ்வெல் செய்து கொண்ட உடன்படிக்கையின் முக்கியப்பகுதி, ஒரு குறிப்பிட்ட சங்கரலிங்கம்பிள்ளைக்கு யாரும் எந்த அலுவலும் கொடுக்கக் கூடாதென்றும் அல்லது பாளையக் காரர்கள் யாரும் உதவி அளிக்கக் கூடாதென்றும் இடப்பட்ட கட்டளையாகும். இந்த சங்கரம்பிள்ளை சிவகிரி பாளையக்காரன் மகனை அவன் தந்தைக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டியவர்களில் ஒருவன். இந்த