பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 262


சேத்துர் பாளையக்காரன் மகன் மைனராக இருந்தமையால் அவனுடைய பாளையம் லாண்டனால் நியமிக்கப்பட்ட நிர்வாகியிடம் இருந்தது. ஆனால் அந்த நிர்வாகியை விலக்கிச் சிறைப்பிடித்தான் ஒரு முறைகேடன் (usurpet). இத்தகைய ஒழுங்கு மீறிய செய்கைகளைக் கவனியாது விட்டுவிட்டால் மேலும் மிகப் பெரிய தொல்லைகளுக்கு அவை வழிகோலும் என்பதை உணர்ந்த அரசு இப்பொழுது காப்டன் டெய்ட்டனை (Captain Dighton) ஒரு படையுடன் சாத்துருக்கு அனுப்பி முறை கேடாக வந்த நிர்வாகியைச் சிறைப்பிடித்து வரும்படி அனுப்பிவைத்தது. அவன் 1793 ஆம் ஆண்டு ஜூலையில் கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தான். ஆனால் அங்கு பூட்டிய கதவுகளே அவனை வரவேற்றன. கோட்டைக்குள் இருந்த (ஊத்துமலை ஆவுடையாபுரம்) ஜமீன்தார்களின் துருப்புகள் அவன் பின் வாங்காவிடில் அவனைச் சுட்டுவிடுவதாக அச்சுறுத்தின. அவன் பின் வாங்கினான். ஆனால் கலெக்டர் கலகக்காரர்களைத் தாக்கக் கூடாதென மேஜர் ஸ்டீவன்சனுக்குக் கட்டளையிட்டார். அரசாங்கம் திரு. லாண்டனை போலீசு, பாளையத்தின் உள் நிர்வாகங்கள் முதலியவற்றில் தலையிடக்கூடாதென்று விலக்கி அவன் வரிவசூலிக்கும் பணியில் மட்டும் ஈடுபடும்படி அறிவிக்கப்பட்டான். ஆனால் 1792இல் நவாபுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி வரிவசூலிக்கும் அதிகாரம் கம்பெனிக்கு அளிக்கப்பட்டதைத் தவிர அவர்களுக்கு வேறு அதிகாரங்கள் இல்லை. துருப்புகள் குறைவாக இருந்தமையால் கால நிலையை ஒட்டி அரசாங்கம் பக்குவமாக நடந்து கொண்டது. இந்தக் கொள்கை நாட்டில் அட்டூழியங்களை விரைவில் உண்டுபண்ணியது. இத்தகைய முரணான அரசாங்கக் கட்டளைகள் மிகச் சிறு பாளையக்காரர்களைக் கூட துணியச் செய்யப் போதுமானதாக இருந்தது. அதன்படி மேஜர் ஸ்டீவன்சன் சில நாட்களுக்குப் பின் ஒரு பொது எதிர்ப்பைக் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரிக்கை அனுப்பினான். அதே சமயத்தில் கட்டபொம்ம நாயக்கன் மாகாணத்தின் கிழக்குப் பாகத்தைக் கொள்ளையடித்து மக்களைக் கொலை செய்வதாகவும், சாத்துர் நிர்வாகியைத் தேடிச் சென்று லெப்டினன்ட் செயின்ட்லீகரை (Liebtenant St. Legar) வழியில் பூலித்தேவர் எதிர்த்து, அவனுக்கு எதிராகக் கோட்டைக் கதவுகளை மூடி விட்டதாகவும் அறிவித்தான். சமீபத்தில் பல பாளையங்களில் எல்லைகள் மாற்றி அமைக்கப்படுவதற்குமுன் கர்னல் மாக்ஸிவெல் (Coronel Maxwell) செய்து கொண்ட உடன்படிக்கையின் படியும் புது அமைப்பின் பகுதியின் படியும் பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான இரு கிராமங்களை எட்டயபுரத்திற்குத் தரவேண்டுமென்று இருந்தது. ஆயினும் கட்டபொம்ம நாயக்கன் அந்தக் கிராமங்களை ஒப்படைக்க