பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 270


யுள்ள காலத்திற்கு முற்பட்டகாலம் ஆக்கிரமிக்கப்பட்ட வரிவசூல் காலம் என்றும் அழைக்கப்பட்டது.

1792 ஜூலை 12 ஆம் தேதி நவாபுடன் ஒரு புது உடன்பாடு முடிவாயிற்று. அதன்படி நாடு முழுவதிலும் பிரிட்டிஷ் துருப்புகள் இராணுவ அரணாக அமைக்கப்படும். அதன் செலவினங்களுக்குத் தேவையான தொகையை நவாபு கொடுக்கவேண்டும் என்று தீர்மானமாயிற்று. போர் ஏற்படுங்காலத்தில் கம்பெனியே நாட்டின் நிர்வாகம் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அமைதிக் காலங்களில் நாட்டின் நல்லாட்சிக்குத் துணைபுரியும் நவாபின் பெயரால் பேஷ்குஷ் அல்லது பாளையக்காரர்களிடமிருந்து வரிவசூல் செய்ய வேண்டும். நவாபு இதற்கான பரிசு அளிக்க வேண்டும். மற்ற விவரங்களுக்கு 1792 என்ற ஆண்டு தலைப்பைப் பார்க்கவும். இந்த உடன்படிக்கையின்படி முன்னைவிட பாளையக்காரர்கள் ஆங்கில அரசாங்கத்தின் நேரடி ஆட்சிக்குட்பட்டார்கள். பாளையக்காரர்களை அடக்குவதற்கான தெளிவான உறுதியான உரிமைகளை அரசாங்கத்திற்குக் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் பாளையக்காரர்களை ஆட்சி செய்யும் அதிகாரம், அதுவரை நவாபிடம் இருந்தமையால் ஒழுங்கை நிலைநாட்ட ஆங்கில அரசாங்கம் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் அனைத்திலும் ஏறக்குறைய இவ்வாட்சி அதிகாரம் குறுக்கிட்டமையால் இந்த உரிமையானது சூழ்நிலைகளால் பெருமளவிற்கு சரி செய்யப்பட்டதைக் காண்கிறோம். 1792 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி அரசாங்கத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட சிவில் அதிகாரிகள் பாளையக்கார பேஷ்குஷ்களின் கலெக்டர்கள் என்று பொதுவாகக் குறிக்கப்பட்டனர். பேஷ்குஷ் என்ற அதிகாரிகளின் பெயர்களில் பல நிலையற்றவை. இந்த வரிசையின் முதல் கலெக்டராகிய டோரின் கொள்ளிடத்திற்குத் தெற்கே உரிமை பெற்ற பாளையக்கார பேஷ்குஷ் கலெக்டர் அல்லது சில சமயங்களில் கொள்ளிடத்திற்குத் தெற்கேயுள்ள பகுதி கலெக்டர் என்று பொதுவாக அழைக்கப்பட்டு வந்தனர். அரசாங்கத்தினரின் கடிதத்தில் அவருக்கு வேலை நியமன கட்டளை வந்தபோது ஜமீன்தார்கள் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலுள்ள பாளையப் பேஷ்குஷ்களின் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அதிகாரப் பத்திரங்களில் திரு. லூஷிங்டனுக்கு நீண்ட விருதுப்பட்டியல் கொடுக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன். பாளையக்கார பேஷ்குஷ் இராமநாதபுர கலெக்டர், இராமநாதபுரம் பாளையக்கார பேஷ்குஷ் கலெக்டர், உரிமை மாற்ற வரிவசூல் பேஷ்குஷ் கலெக்டர், தென் பேஷ்குஷ் திருநெல்வேலி வரிவசூல்களின் கலெக்டர், சில சமயங்களில் சுருக்கமாக எளிமையாகக் கலெக்டர் என்றும் அழைக்கப்பட்டார்.