பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19கால்டுவெல்

- மறுக்க முடியாத - மேற்கோள் வடநாட்டு வரலாற்றுச் சான்றுகளில் சிறந்த கி.மு.250 ஆம் ஆண்டின் அசோகர் கல்வெட்டு ஒன்றில் இருக்கிறது.

பாண்டியர்களுடன் அருச்சுனன் புரிந்துகொண்ட கலப்புத் திருமணத்தின் தொடர்பு

மகாபாரதத்தின் ஆதிபருவத்தில் இத்திருமணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது தெரிகிறது. வடமொழி மூலத்தில் இந்த அரசன் பாண்டியன் என்ற பெயருடையவனாயில்லை. சாதாரணமாகச் சித்திரவாஹனா என்றே குறிப்பிட்டிருக்கிறது. அவனது நகரம் மதுரையன்று; மணிபுரா. மோனியர் வில்லியம்ஸ் என்பவரின் வடமொழி அகராதியில் இந்நகரம் கலிங்க நாட்டிலுள்ளதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நகரம் பாண்டியர்களின் நாட்டிலோ, அன்றி அதை அடுத்தோ இல்லை. அவ்வரசன் மகளின் பெயர் சித்திராங்கதை என்பது. அருச்சுனன் அப்பெண்ணை மணந்து கொண்டு, அவன் சபதப்படியே புருவாகன் என்ற பிள்ளை பிறக்கும் வரை மணிபுராவிலேயே தங்கினான். தமிழில் உள்ள மகாபாரதத்தின் உரையாக்கம் மணிபுராவை மதுரை என்றும், சித்திரவாகன் பாண்டிய அரசன் என்றும், அவனே மதுரையை ஆண்டுவந்த பாண்டிய அரசர் வரிசையில் இரண்டாம் அரசனாயிருந்த மலயத்துவசன் என்றும் துணிந்து குறிக்கின்றது. தென்னிந்திய வெளியீடாகிய மகாபாரத மூலத்தில் இது தொடர்பாகச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சி மட்டும் இல்லை என்றால், பாரதத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இவ்வாறு கூறியது முற்றிலும் தேவையற்ற கற்பனை என்று சொல்லலாம். பாண்டவ உடன்பிறப்பாளர்களுள் ஒருவனாகிய சகாதேவன் தனது திக்குவிசயத்தின்போது மணிபுரத்திற்குச் சென்று அருச்சுனன் மனைவியும் அவன் மைத்துனியுமாகிய சித்திராங்கதையை வரவேற்றான் என்பது சபாபருவத்தில் கூறப்பட்டிருக்கிறது. இச்செய்தியில் மணிபுரம் பாண்டியனின் இருப்பிடமெனவும், சகாதேவன் பாண்டிய மன்னனிடம் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றான் எனவும் வர்ணிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி தமிழ் மொழி பெயர்ப்பாளரின் நேர்மையைப் புலப்படுத்துகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாகப் பேராசிரியர் வில்சன் வடவிந்திய மகாபாரதப் பிரதிகளில் இச்செய்தி கூறப்படவில்லை என்று கூறுகிறார். அவரிடமிருந்த சொந்தப் பிரதி ஒன்றில் மட்டிலுமின்றி, காசியிலிருந்த ஐந்து பிரதிகளைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தும் ஒன்றிற்கூட அச்செய்தி இல்லை. எனவே, தமிழ் மொழி பெயர்ப்பாளரின் கருத்து முற்றிலும்