பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

273 கால்டுவெல்


கட்குள்ளாகவே வசூலித்த தொகைக்கு அதிகமாக இல்லை என்பது அவர்களால் உணரப்பட்ட மறுக்க முடியாத - பதிவு செய்யப்பட்ட உண்மையாகும்.

"72.நவாபு பாளையக்காரர்கள் மீது கொண்டிருந்த அதிகாரத்தின் சார்பிலே மிகக் குறைவான வரியை மிக அதிகமாகச் செலவு செய்து வசூலித்து வந்தான். 1792 ஜூலை 12 ஆம் தேதி ஏற்பட்ட உடன் படிக்கையின் 5 வது பிரிவுப்படி நவாபு தனக்கு மிகக் சாதகமாகச் சில பாளையக்காரர்கள் செலுத்தவேண்டிய வரியை வசூலிக்கும் உரிமையைக் கம்பெனியிடம் ஒப்படைத்தான். அதன்படி அவனுடைய கப்பத்தின் பகுதியான முழு வரிப்பணத்தையும் கம்பெனி தனது சொந்த செலவு துன்பங்களுக்கிடையே வசூலித்துக் கொள்ள வேண்டும். வரிவசூலுக் காகச் செலவழிக்கும் தொகையையோ அல்லது வரிவசூலில் ஏற்படும் கப்பத் தொகைக் குறைவையோ நவாபிடம் வசூலிக்க முடியாது. குறிப்பிட்ட பாளையக்காரர்களின்மீதுள்ள நவாபின் ஆதிக்கத்தை 6வது பிரிவின் சாரப்படி உறுதிப்படுத்துகிறது. கம்பெனி வரிவசூலுக்குத் தங்கள் முழு அதிகார வலிமையையும் பயன்படுத்தல்; ஒரே சீராக அவர்களிடம் கப்பங்களை வசூலித்தல்; வழக்கமான காரியங்களில் மேற்கண்ட பாளையக்காரர்கள் மேற்கண்ட நவாபுக்கு செலுத்த வேண்டிய இராச விசுவாசம்; கீழ்ப்படியும் தன்மைகளை வற்புறுத்தல்; பழக்கமுறையிலுள்ள வழிகளில் வரிவசூல் முதலியவைகளைச் செய்யப் பாளையக்கார வேலையாட்களைத் தயாரித்தல்; மற்றும் எல்லாவிதமான அதிகாரச் செயல்களையும் நவாபின் பெயராலேயே செய்துவர வேண்டும்."

முந்திய பிரிவில் வரிவசூல் முழுவதும் கம்பெனியிடம் ஒப்புவிக்கப்பட்டுவிட்டமையால் எந்தக் காரணத்திற்காக பழக்கமுறையிலுள்ள வழிகளில் வரிவசூல் முதலியவைகளைச் செய்ய பாளையக்கார வேலையாட்களைத் தயாரித்தல் என்பதை உடன் படிக்கையில் புகுத்தினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தல் எளிதாக இல்லை.

“163. போர்த்தன்மையை விலக்கி, வரிவசூல் அதிகாரத்தையும் ஏற்றுக் கொண்டபின் உற்சாகத்துடனும் பொறுமையுடனும் நவாபு மன நிறைவு எய்தும்படி எத்தகைய அதிகார உரிமை எஞ்சியிருக்கிறதென்பதை எடுத்துரைத்தல் எளிதல்ல. உடன்படிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வாசகத்தை விடவும், வழக்கமான செயல்களை விடவும் பொருத்தமான விதத்தில் விளக்க இயலாது. பெயரளவில் பாளையக்காரர் மீது நவாபுக்குரிய ஆதிக்கத்தை நாம் மறுக்க முயலவில்லை. அதே சமயத்தில் நம்மிடம் அவன் ஒப்புவித்த வரிவசூல் ஒரே சீராக நிலையாயிருக்க வேண்டிய அதிகாரத்தை மட்டும் காப்பாற்றிக் கொள்ளக்