பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/282

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 274


கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அந்த நோக்கத்தை நடைமுறையில் பாதிக்கத் தக்க விதத்தில் பாளையக்காரரிடமிருந்த மாவட்டங்களில் ஏற்பட்ட அநேக சூழ்நிலைகளில் பின்வருபவை குறிப்பிடத்தக்கவை. அவர்கள் தங்களிடம் வைத்திருந்த போர்ப்படையொன்று, அவர்களுடைய குறிப்பிட்ட பற்றுகள் அல்லது அவர்கள் மன எழுச்சி தூண்டியபடி ஒருவர் மற்றொருவர்மேல் போர்தொடுக்க அல்லது கொள்ளையடிக்க வலுவூட்டியது. பொருளாதாரம் அல்லது உள்நாட்டு ஒழுங்கு முறை எதுவாயினும் அவர்கள் கையாளும் முறைகள் இயல்பாகவே அவர்களுடைய கஜானாக்களைத் தரித்திரமடையச் செய்யத்தக்க தாயிருந்தது. அதனால் அந்நிகழ்ச்சி கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தொகையை ஒழுங்காகச் செலுத்த முடியாமல் தடுத்தது. கொடுஞ் செயல்கள் புரியவும் முடியவில்லை. மக்களிடம் பகை காட்டவும் இயல வில்லை. எக்காலத்திலும் இத்தகைய செயல்கள் ஒரு நாட்டைப் பாழாக்கும் தன்மையுடையன. அதனால் வரிவசூலும் பாதிக்கப்படும். இத்தகைய, இன்னும் இதுபோன்ற செயல்களுக்கேற்ற பரிகாரங்களை நடைமுறையில் கொண்டுவரும் அதிகாரம் நம்மிடம் இல்லையானால், வரிவசூல் செய்யப் பெற்றிருக்கும் அதிகாரத்தால் வசூலிக்கப்பட வேண்டிய வரித் தொகையையும் இறுதியில் நாம் இழந்துவிட நேரிடும் என்பது தெளிவு. எனவே இந்நிலையில் நவாபின் கப்பப் பணத்திற்காகப் பாளையக்காரர்களிடமிருந்து பெறும் தொகையைப் பொருத்த வரை இந்த உடன்படிக்கை பயனற்றதாகிவிடுவது மன்றி, மேலே கூறப்பட்ட பழிகளெல்லாம் நாட்டில் நீடிக்கவிட்டால் காலப்போக்கில் குறிப்பிடத்தக்க ஆண்டு இழப்பு ஏற்படுவதன்றி அது அதிகமாகச் சேர்ந்து கம்பெனிக்கு அதிக இழப்பு ஏற்படும்."

'164. தற்போதைய வாக்குவாதத்திற்கு முக்கிய தூண்டுதலாக உங்களுடைய ஆவணங்களின் பெரும்பகுதிகளிலிருந்து கிடைத்த செய்திகளாலும், வங்காள அரசாங்கத்தாலும் உங்களாலும் வன்மையாக உணர்த்தப்பட்டவைகளை அறிந்து, பல பாளையக்காரர்களிடமிருக்கும் மாவட்டங்களில் நல்ல அரசாங்கம் நிறுவ உறுதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவையை உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.

'166. ஆக மொத்தத்தில் இந்த விஷயத்தைப் பற்றித் தீர ஆலோசித்ததில், தீவிரநிபந்தனையின் கீழ் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பாளையக்காரர்கள் மீது நவாபு பெற்றிருக்கும் ஆதிக்கத்தின் அளவு இவற்றை மேலும் சிந்தித்துப் பார்த்தத்தில் நம்முடைய தீர்மானத்தினால் மேன்மை தங்கிய நவாபு பயன்படுத்தும் அதிகாரத்திலிருந்து ஒரு தனிப்பட்ட சிறப்பு உரிமையோ அல்லது பெயரளவிலுள்ள