பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

277 கால்டுவெல்


என்று அழைப்பார்கள். இவனுடைய பெயரும் கைதிகளின் பட்டியலில் உள்ளது. கருத்தையா - சிவத்தையா என்றால் முறையே கருப்பு நிறமுடையவன் அழகான தோற்றமுடையவன் என்று பொருள். உண்மையில் இதன் பொருள் முறையே கருப்பு, சிவப்பு.

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனுடைய பெரிய பகைவன் எட்டயபுரம் பாளையக்காரன். (கால்டுவெல்லே ஒப்புக்கொள்ளும் கருத்து! - ந.ச.) இவனுடைய பாளையம் சிறிது வடக்கே உள்ளது. எட்டப்ப நாயக்கன் என்ற குடும்ப மரபைத் தொடங்கியவர் பெயரால் எட்டயபுரம் என்று பெயர் பெற்றது என்று சொல்லப்படுகிறது. அக்குடும்ப உள்ளுர் வரலாற்று ஆசிரியர், மதுரையை அரசாண்ட குமார கிருஷ்ணப்ப நாயக்கரின் காலத்தில், 1565 ஆம் ஆண்டு இந்த இடம் நிறுவப்பட்டது என்று கூறுகிறார். எட்டப்பன், எட்டையன் இரண்டும் ஒத்த சொற்கள் தான.

மேஜர் பானர்மன்னின் படையெடுப்புக்கு முந்திய நிகழ்ச்சிகள்

கடந்த நூற்றாண்டின் இடைக்காலத்தில் திருநெல்வேலியில் புலித்தேவர் எப்படி இருந்தாரோ அதேபோல் அந்த நூற்றாண்டின் இறுதியில் எல்லா ஒழுங்கீனங்களுக்கும் அநீதிகளுக்கும் (கால்டுவெல் கருத்து நாம் போற்றத்தக்கது! - ந.ச) நடுநாயகமாகக் கட்டபொம்மன் இருந்தான். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையிலிருந்து அப்பாளையக்காரன் அவன் தலைமையில் ஆயுதமணிந்த ஆட்களைத் திரட்டிக்கொண்டு சர்க்கார் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையடித்தான். பாளையக்காரர் கிராமங்களையும் சூறையாடி வழியில் கண்டயாவற்றையும் பறிமுதல் செய்துகொண்டும் பல சமயங்களில் முக்கிய கிராமவாசிகளைத் தூக்கிக் கொண்டும் போயினர். 1797 இல் இராமநாதபுரம் நாட்டில் கலகம் ஏற்பட்டது. அந்த எதிர்ப்பில் திருநெல்வேலி பாளையக்காரர்களில் பலர் (ஏறக்குறைய எல்லோரும்) சேர்ந்து கொண்டனர். கட்டபொம்ம நாயக்கன் இவர்களுக்குத் தலைமை தாங்கினான். இவர்கள் அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய கிஸ்தித் தொகையைச் செலுத்த மறுத்தனர். தெற்கே ஏற்பட்ட குழப்ப நிலை பற்றிய எச்சரிக்கை சென்னைக்கு (மதராசுக்கு) அனுப்பப்பட்டது. உடனே இராமநாதபுரம் சென்று பாளையக்காரர்களிடமிருந்து அவர்கள் நிபந்தனைகளின் தன்மையை ஆராய்ந்தறியும் படி கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. ஷெரானின் 'இறுதிப் பாளையக்காரப் போரின், குறிப்புகளுக்கான முன்னுரையைப் பார்க்க

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் கலெக்டர் திரு. ஜாக்சன் தென் வரிவசூலுக்கும் இராமநாதபுரத்திற்கும் அச்சமயத்தில் கலெக்டராக