பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

279 கால்டுவெல்

 தேதியிட்ட கடிதத்தில் தங்கள் சமூகத்திற்குப் பரிந்துரை செய்ததன் காரணத்தை மிக விளக்கமாக எழுதும்படி எங்களைக் கட்டாயப் படுத்தியது.

202. இந்த விவரங்கள் தங்கள் சமூகத்திற்குச் சென்ற மாதம் 27 ஆம் தேதி இறுதியில் பணிவுடன் அனுப்பப்பட்டது. அதோடு அவருடைய கவனத்தை ஈர்த்த முதல் பொருளாக அவர் கருதிய அவனால் எழுதப்பட்ட கடிதங்கள் எல்லாவற்றையும் பாளையக்காரன் பெற்றுக் கொண்டு புரிந்து கொண்டானா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நாங்கள் இட்ட கட்டளைகளைக் கலெக்டர் எப்படி செயல்படுத்த முற்பட்டார் என்ற முறைகளும் அனுப்பப்பட்டன. இந்த வழக்கின் சூழ்நிலையில் இந்தக் கட்டளையைச் செயல்படுத்துவதில் அவன் நடத்தை எவ்வளவு பொருத்தமானது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம். அவன் மேற்கொண்ட வழிக்கு பதிலாக, கலெக்டரிடமிருந்து பாளையக்காரன் பெற்ற கடிதங்களைக் கொடுக்குமாறு கேட்டிருந்தானானால், எவ்வித பிழை உணர்வுக்கும் குறைந்த வாய்ப்பளித்திருக்கலாமென்று நாங்கள் நம்புகிறோம். பின்னர் ஜாக்சனின் எல்லாக் கடிதங்களும் எந்த மாற்றங்களுமின்றி கொடுக்கப்பட்டனவா என்றும் பார்த்திருக்கலாம். இது கலெக்டரின் எண்ணப்படி எந்தத் தவறுக்கும் எதிராகப் பாதுகாப்பாயமைந்திருக்கும். ஏனெனில் இவை நம்பக் கூடியவையாகத் தோன்றவில்லை. அவன் அறிவித்தது போல் அதுபற்றி அறியாதிருந்தாலும் மே 23 ஆம் தேதியிட்ட கலெக்டரின் கடிதத்தில் பாளையக்காரர் அமைத்ததாகக் கருதப்படும் கடுமையான பத்திகள் அவனுடைய பாளையத்தைக் கவர்ந்து கொள்வது பற்றியதாயிருந்ததால் அது அவனுடைய உடைமைகளின் பாதுகாப்பு பற்றிய அச்சத்தை வியப்படையச் செய்ததால் அந்த உணர்வு தொடர்ந்து நடைபெற்ற அட்டூழியச் செயலைச் செய்யும்படி தூண்டியிருக்கலாமென்று தோன்றுகிறது. (பைக்குள் இருந்த பூனை பைய வெளியே வருகிறது! ந.ச.)

203. இராமநாதபுரம் கோட்டைக்குள்ளேயே கலெக்டரின் கச்சேரிக்குள் பாளையக்காரன் வந்து தோன்றி, பின்னர் குற்றவாளிபோல அதிவிரைவாக அங்கிருந்து ஓடிப்போன அவனுடைய சூழ்ச்சித் திட்டத்தினால் அவன் என்ன நோக்கம் கொண்டு அவ்வாறு செய்தான் அல்லது அதனால் அவன் என்ன பயன் பெற்றான் என்று எங்களால் கற்பனை செய்ய இயலவில்லை. எனினும் கலெக்டரின் முடிவையும் நாங்கள் ஒப்புக் கொள்ள முடியவில்லை. (ஆ! ஆ! - ந.ச.) எனினும் அவனே அவனுடைய அழிவுக்கான முடிவுகளைத் தேடிக் கொண்டான் என்பது உறுதி. பாளையக்காரன் கோட்டையிலிருந்து வெளியேறிய அக்கணமே