பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 288


பான ஆவணங்களின் மூலத்தை இங்குத் தருகிறேன். மூலச் செய்திகளைத் திருத்தி எழுதி தொகுக்கப்பட்டவற்றை விட சுவைமிக்கதாயிருக்கும். (என்னே கால்டுவெல்லின் கலையுள்ளம்! கடமையுள்ளம்! ந.ச.)

வரிவாங்கும் துறையினருக்கு அரசின் கடிதம்

பாளையக்கார பேஷ்குஷ்கள் கலெக்டரின் முந்திய வேண்டுகோளிலிருந்து, கம்பெனி அரசின் ஆணைப்பற்றிய அறியாமையாலோ அல்லது தங்களுடைய சொந்த அரசபக்தியினாலோ, நவாபு ஆட்சியின் கீழ் தற்காலிகமாகப் படை இல்லாத நேரத்தில், பாளையக்காரர்கள் தங்கள் பழக்கமான கலகச் செயல்களில் ஈடுபடாது தடுக்கவில்லை என்று அறிந்து நாங்கள் கவலைப்படுகின்றோம். கட்டபொம்ம நாயக்கனின் கடந்த விசாரணையில் நாம் காட்டிய பொறுமை, கோபத் தணிவு, நீதிமுறை ஆகியவை பொதுவாகப் பாளையக்காரர்களுக்கும் சிறப்பாகக் கட்டபொம்மனுக்கும் பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய நல்லெண்ணத்தையும் அவர்களிடம் பக்குவமாய் நடந்து கொள்ள வேண்டிய தன்மையையும் உண்டாக்கியிருக்கும் என்று நம்புகிறோம். ஆனால் ஆயுதந் தாங்கிய படை வீரரின்றி கலெக்டரைச் சந்திக்க இனங்காதது, அவனுடைய கிஸ்திப் பணத்தைக் கட்டுவதில் காலங்கடத்துவது, சிவகிரி பாளையக்காரருக்கு எதிராகப் போர் செய்தது ஆகிய செயல்கள் மேலும் நன்மை பயக்கக் கூடிய வழிகளை எல்லாம் போக்கி அவர்களைச் சரிகட்டுவதில் இருந்த நம்பிக்கையையும் இழக்கும்படிச் செய்துவிட்டது. எனவே தெற்கு மாகாணங்களுக்குப் போதுமான வீரர்கள் உள்ள படை ஒன்றைக் கூட்டி, கம்பெனி அரசாங்க அதிகாரி ஆட்சியை உறுதி செய்ய வேண்டுமெனவும், இவற்றிற்கு மாறாக வலிந்து செய்யப்ப்டும் செயல்களுக்காக அவர்களைத் தண்டிக்கும்படி அறிவித்தல் நலமென்றும் தீர்மானித்துள்ளோம். இப்படையின் தலைமை ஆணை உரிமையை ஜான் பானர்மனுக்கு கொடுப்பின் பயனுடையதாயிருக்குமென எண்ணியுள்ளோம். எங்களது இவ்வெண்ணங்களைக் கலெக்டர் நன்றாகப் புரிந்து கொண்டு பாராட்டுவதற்காக அந்த அதிகாரிக்கு எங்கள் ஆணைக் குறிப்பு விவரங்களடங்கிய ஒரு படிவத்தை அனுப்பியுள்ளோம்.

இந்தக் குறிப்புகளைக் கலெக்டருக்குத் தெரிவிக்கும்போது மேஜர் பானர்மனிடமிருந்து இப்போதைய படையைப் பெருக்குவதற்காகத் தானே வரும் விண்ணப்பங்கள் எதுவாயினும் விரும்புகிறோம். இப்படையெடுப்பின் வெற்றிக்கு அது இன்றியமையாததென்று எதிர்பார்க்கப்படுவதால், அந்த அதிகாரிகளின் ஏற்பாடுகளையும் ஆணைகளையும் உடனுக்குடன் மிகக் கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும். ஆதலால்