பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

293 கால்டுவெல்

கோட்டைக்கு அனுப்பியுள்ளேன். எனக்கு இது பற்றிச் சிறிதளவேனும் ஐயமில்லை. எனினும் கோட்டையில் வெடிப்பை உண்டாக்க பீரங்கிகளுக்காகக் காத்திராது. ஐரோப்பியர்கள் வந்தவுடன் அந்த இடத்தைக் கைப்பற்ற இயலும். ஆனால் இனி ஏற்பட இருக்கும் எந்த எதிர்ப்பின் முடிவும் மிகக் கடுமையானதாயிருக்கும். (ஒ! ஓ! - ந.ச.) எனவே, நான் மிகக் கவனத்துடன் முன்னேற வேண்டும். அச்செயல் முடிந்த அக்கணத்திலேயே படைத்தலைமைத் தளபதியிடம் சுதேசி அதிகாரிகள், படைகள் முதலியவர்களின் நடவடிக்கைகள் தொடர்பான என் கருத்துக்களைக் கூறுவேன். நான்கு ஐரோப்பிய அதிகாரிகள் இறந்ததற்கு ஈடாக ஒரு சுதேசி அதிகாரி காயமடைந்தார் என்ற சூழ்நிலையை நோக்க இந்த இரண்டு சுதேசி அதிகாரிகளுக்கு இன்னும் எவ்வளவு வலிமை தேவை என்பதைப் போதுமான அளவு இந்நிகழ்ச்சி குறிக்கிறது. (! - ந.ச.)

கோட்டைத் தாக்குதல் திரும்பவும் ஆரம்பிக்கும்வரை பாளையக்காரர் காத்துக் கொண்டிருக்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு மாலை நேரத்தின் பிற்பகுதியில் ஐரோப்பியப் படைப்பகுதியினர் வந்து சேர்ந்தனர். அதே நாளில் மற்றொரு தாக்குதலுக்கு மேஜர் பானர்மன் தயார் செய்து கொண்டிருந்தான். எனினும் இரவில் பாளையக்காரரும் அவரது எல்லா ஆட்களும் கோட்டையைக் காலி செய்து விட்டு மறைந்து விட்டனர். உடனே எட்டயபுரப் பாளையக்காரன் அவர்களைத் தேடிப் பின்தொடர்ந்தான். கோலார்ப்பட்டியில் கட்டபொம்மனைச் சந்தித்தான். அங்கு தொடர்ந்த கலவரத்தில் இருதிறத்தாருக்கும் இழப்பு நேர்ந்தது. அங்கிருந்து கட்டபொம்மன் தப்பித்து முதலில் சிவகங்கைக்கும் பின் தொண்டைமான்ராஜாவிடமும் அடைக்கலமாகப் புகுந்தான். அவனுடைய முக்கியமான ஆட்களில் 34 பேர்கள் கொல்லார்ப்பட்டிக்கு அருகில் பிடிபட்டனர். அவர்களுள் முக்கியமானவன் தலைமை காரியஸ்தன் சுப்பிரமணியப்பிள்ளை. அவன் உடனே நாகாலாபுரத்திற்குச் சென்று கொண்டிருந்த பானர்மனிடம் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு அவனைத் தூக்கிலிட்டுத் தலையைப் பாஞ்சாலங்குறிச்சிக்கு அனுப்பி வைத்தனர். (முதல் தூக்கு! - ந.ச.) அதே சமயத்தில் நாகலாபுரப் பாளையக்காரன் இராமநாதபுரத்தில் நடத்திய கொள்ளை கொலைகளில் தலைமை வகித்த அவனுடைய உடன்பிறந்தானாகிய செளந்திரபாண்டியனும் கோபாலபுரத்தில் தூக்கிலிடப்பட்டான். கட்டபொம்ம நாயக்கனே விரைவில் தொண்டைமான் ராஜாவினால் கைது செய்யப்பட்டு, அவனது உறவினர் சிலருடன் மேஜர் பானர்மனிடம் அனுப்பப்பட்டான் (தொண்டைமான் செய்ததைக் கால்டுவெல்லே கூறுகிறார் - ந.ச.) அங்கு பானர்மனே அவனை விசாரணை செய்து அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி கயத்தாற்றிலுள்ள பழைய கோட்டைக்கு அருகிலிருந்த திடலில் மற்ற திருநெல்