பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 294


வேலிப் பாளையக்காரர் முன்னிலையில் தூக்கிலிடும்படி கட்டளையிட்டான். அப்பாளையக்காரர்கள் வியப்புடனும், மெளன வேதனையுடனும் வேண்டா வெறுப்பாக அக்காட்சியைக் கண்டனர். (ஐயோ! - இந்த அளவேனும் கால்டுவெல் வாயிலாகவே உண்மை விளங்குகிறதே!-ந.ச.) இந்த நிகழ்ச்சிகளின் விவரங்களைப் பானர்மனுடைய வார்த்தைகளிலேயே கூறுகிறேன்.

அரசுச் செயலருக்கு மேஜர் பானர்மன் எழுதியது

மேன்மை தங்கிய கவர்னர் ஜெனரல் சமூகத்திற்குத் தெரிவித்துக் கொள்வது: தங்களுடைய 19வது படை அணி வகுப்பும், 12 பவுண்டு பீரங்கியும் நேற்று மாலை இந்த இடத்திற்குச் சுமார் 6 மணி அளவில் வந்து சேர்ந்தன. அந்த நேரம் காலங்கடந்த பொழுதாயிருந்தது. அன்றியும் அனைவரும் மிகவும் களைத்திருந்தமையால் கோட்டையை மறுபடியும் தாக்க உடனடியாக எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை. இரவில் பாளையக்காரனும் அவனுடைய ஆட்களும் கோட்டையை விட்டு ஓடிவிட்டனர். அது ஓரளவு எனக்கு மனநிறைவைத் தந்தது. தாக்கப்பட்ட இடத்தை ஒரு மணித்துளி சோதனை செய்ததிலேயே மிகத் தகுதி வாய்ந்த இடங்களையே தேர்ந்தெடுத்திருப்பதாகத் தோன்றிய அச்செய்தி சிறியதாயிருந்தாலும் அதைத் தங்கள் சமூகத்திற்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உள்நாட்டுப் படைகள் மட்டும், நான் அடிக்கடி கண் கூடாகக் கண்டிருந்த மற்ற நெருக்கடி குறைந்த நேரங்களில் போரிட்டுக் காட்டிய அளவு திறமையுடனும் உற்சாகத்துடனும் போரிட்டிருந்தால் என்னுடைய சொந்த எண்ணத்தின் எதிரொலியை உணர்ந்து செயல்பட்டிருந்தால் சில நிமிடங்களில் அந்த இடம் முழுவதும் நம்முடையதாகியிருக்கும். (அப்படியானால் கூலிப்பட்டாளத்தின் மனச்சான்று அதைக் குடைந்து உடைத்ததோ? - ந.ச.)

பாளையக்காரன் தப்பியதற்குப்பின் தொடர்ந்த நிகழ்ச்சிகள்

கீழ்க்காணும் கடிதங்கள் கட்டபொம்மனையும் அவனுடைய முக்கிய ஆட்களையும் தொடர்ந்து சென்று கைது செய்த நிகழ்ச்சிகளை விளக்குகிறது.

6 ஆம் தேதியன்று என் கடிதத்தை அனுப்பியவுடனே நம்பகமான இடத்திலிருந்து கட்டபொம்ம நாயக்கன் சென்றிருக்கக் கூடிய இடங்களைப் பற்றிச்செய்தி அறிந்தவுடனேயே, கால நீட்டிப்பு செய்யாது, பல பாளையக்காரர்களுக்கு, எனக்குத் தெரிந்தவரை முக்கியமாக அவனுடைய எதிரிகளான பாளையக்காரருக்கு (அது சரி! - ந.ச.) அவர்களுடைய அதிகார வலிமையெல்லாம் பயன்படுத்திக் கட்டபொம்மனைப்