பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

295 கால்டுவெல்


பிடிக்க வேண்டுமெனக் கடிதங்கள் எழுதினேன். பாளையக்காரர்களுக்கு அனுப்பப்பட வேண்டிய கடிதங்கள் தயாரானதும் படையை வடதிசை நோக்கி முன்னேறச் செய்தேன். காயமடைந்தவர்களைப் பாஞ்சாலங்குறிச்சியிலேயே விட்டுவிட்டு அவர்களுக்கான எல்லா நலன்களையும் செய்து கொடுத்து அவர்களைக் காப்பதற்குப் போதுமான வீரரையும் விட்டு வந்தேன்.

நான் படையுடன் முன்னேறிச் செல்லும்போது இடது சாரியில் இரு குதிரைப்படை அணிகளை லெப்டினன்ட் மல்லஸ் தலைமையிலும், காப்டன் ஒ'ராலியின் தலைமையில், 400 வெடிமருந்து எறியும் வீரர்களையும் ஒதுக்கினேன். அவர்கள் செயலாற்றத் தயாராய்க் காத்திருப்பர். நான் சூழ்நிலைகளை எதிர்நோக்கியிருக்க வேண்டியிருப்பதால் நான் செல்லும் வழிக்கு மேற்காக அவர்கள் சென்று பாளையக்காரர்களுடன் ஒத்துழைக்கும்படி கூறினேன். பிறகு நான்படையின் சிறந்த பகுதியுடன் முன்னேறிச் சென்றேன். நான் சிறிது தூரம் முன்னேறிச் செல்வதற்கு முன்பே எட்டயபுரப் பாளையக்காரனிடமிருந்து பதில் கிடைத்தது. அதில், அவன் என் மூலமாகப் பெற்ற அரசாங்க ஆணையைச் செயல்படுத்துவதாக உறுதி கூறியிருந்தான். அதற்காகத் தனக்கு எந்தவிதமான செலவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தான். அவனுடைய ஆட்கள் அடங்கிய ஒரு கூட்டத்துடன் உடனே அவனே நேரில் கட்டபொம்மனைத் தேடிச் செல்வதாகவும் சில சிப்பாய்களை அனுப்பிவைத்தால் உதவியாக இருக்குமென்றும், அச் சிப்பாய்களையும் காலதாமதமின்றி உடனடியாகத் தன்னோடு அனுப்பிவைக்க வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டிருந்தான். (எட்டயபுரத்தான் செலவுக்குப் பணம் கேட்கவில்லை; சிப்பாய்கள் கேட்டான் - என்ன திறமை! - ந.ச.)

அதன்படி லெப்டினன்ட் டல்லசுக்கு ஆணைகள் அனுப்பப்பட்டன. எட்டயபுரத்தான் செல்லும் வழியில் அப்படையை நடத்திச் செல்ல ஒரு வழி காட்டியும் அனுப்பப்பட்டான். அந்தக் குதிரைப் படைக்கு உதவியாய் காப்டன் ஒ'ராலியை வெகுவிரைவில் செல்லும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. எட்டயபுரத்து ஆட்களோடு குதிரைப்படை வந்து சேர்வதற்கு முன்பே அவர்கள் கொல்லார்ப்பட்டிக் கோட்டையில் கட்டபொம்மனைச் சந்தித்தனர். அவர்களிடையே சிறு சச்சரவு நடந்தது. அவற்றில் இருதிறத்தினருக்கும் குறிப்பிடத்தக்க இழப்புகள் நேர்ந்தன. எப்படியோ கட்டபொம்ம நாயக்கனுடைய ஆட்கள் சிதறடிக்கப்பட்டனர். கட்டபொம்மன் ஆறு பேர்களுடன் மட்டும் குதிரை மேலேறித் தப்பி விட்டான். அவனைச் சார்ந்திருந்த முக்கிய ஆட்கள் பிடிபட்டனர். அவர்களுள் முக்கியமானவர்கள் தலைமைக் காரியதரிசி சுப்பிரமணியப்