பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

297 கால்டுவெல்


சிறந்த வழிகாட்டியாயிருக்கு மென்பதையும் தெரிவித்துக் கொண்டு நான் என் எல்லை யை மீறியதாக எண்ண வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்" (அடேயப்பா என்ன எச்சரிக்கை! என்ன நிதானம்! - ந.ச.)

காப்டன் ஒராலி (Captain O' Reilly), லெப்டினன்ட் டல்லஸ் (Dallas) படைகள் எட்டயபுரம் பாளையக்காரர்களுக்கு உதவியாக முன்னேறிக் கொண்டிருக்கும்போது, நான் முன்னேறிச் சென்று 9 ஆம் தேதி நாகலாபுரத்தை அடைந்தேன். நான் அங்கு போய்ச் சேர்ந்தவுடன் பாளையக்காரன் வந்து கம்பெனி அதிகாரிகளிடம் அடைக்கலம் புகுந்தான். இந்த மனிதனின் செயல்கள் மிகக் கொடுமை வாய்ந்தன. இவன் இராமநாதபுரத்தில் செய்த கொள்ளைகளும் கொலைகளும் மனிதத் தன்மையையே உலுக்கிவிட்டது. அதற்காகத் தற்போதைக்கு அவனைக் கடுங்காவலில் வைப்பதற்காக நிறுத்திவைத்துள்ளேன். இராமநாதபுரத்தில் சூரையாடிய போது அவனுடைய கொடுமையான கட்டளை களைச் செயலாற்றிய அவனுடைய உடன்பிறந்தானையும் பிடித்து விடுவேனென்ற உறுதி எனக்கு இருக்கிறது. எட்டையபுரப் பாளையக்காரன் இன்னும் கட்டபொம்மனைத் தேடிச் சென்றுகொண்டிருக்கிறான். கட்டபொம்ம நாய்க்கனின் ஆட்கள் சிதறி ஓடியதைப் பற்றிய செய்தி அறிந்ததும் அவனுக்குத் துணையாக அனுப்பிய படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியது தேவையாயிற்று. அவர்கள் 9 ஆம் தேதி இரவு பாசறையில் என்னுடன் வந்து சேர்ந்து கொண்டனர்.

12 ஆம் தேதி மதியம் நாகலாபுரம் பாளையக்காரனின் உடன் பிறந்தானான செளந்திர பாண்டிய நாயக்கனைப் பிடித்து நேற்று காலை வரை நாகலாபுரம் கோட்டையிலேயே சிறைவைத்திருந்தேன். அன்று பல பாளையக்காரர்களின் வழக்கறிஞர்களையும் ஒன்று கூட்டினேன். கலெக்டர் லூஷிங்டன் வாயிலாக வரிவசூல் துறை வெளியிட்ட அறிக்கைகளை அவர்களுக்கு நினைவூட்டினேன். எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் அதிகாரத்தின் அளவையும் அதன் தன்மையைப் பற்றியும் விளக்கினேன். அன்றியும் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள் அப்போது ஏற்பட்ட கொலை, கொள்ளைகள் முதலியவை அதிக தண்டனைக்கு உரியவை எனவும், அவை ஏற்படக் காரணங்களை விசாரணை செய்ய வேண்டுமெனவும் அரசாங்கம் கட்டளையிட்டதற்கான அவசியக் காரணங்களையும் எடுத்துச் சொன்னேன். எனக்குக் கிடைத்த செய்திகளிலிருந்து, இந்தக் கலகங்களில் மிக முக்கியமாகப் பங்கேற்றுக் கொண்டு அரசின் வெறுப்பைப் பெற்ற தனியார்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டிய துன்பமயமான சூழ்நிலை முதன்முதலாக ஏற்பட்டிருக்கிறது. மேலும் நாட்டைப் பாழாக்கி நாட்டு