பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 304

விவரங்களைப் படித்து விளக்கியபோது நான் கீழ்க்காண்பவனவற்றையும் சேர்த்துக் கொண்டேன்.

என் கட்டளைக்குக் கீழ்படிந்து கயத்தாற்றிற்கு வந்திருந்த பாளையக் காரர்களைக் கண்டேன். ஏற்கனவே அளிக்கப்பட்ட தண்டனைகள் நியாய மானவைதான் என்பதைப் பாளையக்காரர்கள் உணரும்படி கேட்டுக் கொண்டேன். வேறு எந்தவிதமான முன்மாதிரிச் செயல்களும் நடை பெறாமையால் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கீழ்ப்படியாமைச் செயல்கள், பொதுவாகப் பாளையக்காரர்களின் கலகக்காரத்தன்மை, அத்தன்மையான காரணங்களினால் உண்டான எண்ணற்ற தீமைகள் இவற்றைப் பற்றி எனக்குத் தெரியாதென்று நம்பவேண்டாமென்றும் எச்சரித்தேன். கலகக்காரத்தன்மை அத்தன்மையான காரணங்களினால் உண்டான எண்ணற்ற தீமைகள் இவற்றைப் பற்றி எனக்குத் தெரியாதென்று நம்ப வேண்டாமென்றும் எச்சரித்தேன்.

அறிவிப்பில் குறிப்பிட்டபடி, அரசு கட்டளைகளை உடனடியாக நடைமுறையில் கொண்டுவர இரண்டு வழிகள் இருப்பதாகப் பாளையக்காரருக்குக் கூறினேன். ஒன்று கோட்டைகளை அழித்துவிட்டு, ஆயுதங்களைக் கொடுத்து விடும்படி பாளையக்காரர்கள் தாங்களாகவே இயல்பாய்க் கட்டளையிட வேண்டுமென்றும், ஆயுதங்களைத் தொகுத்துக் கோட்டைகள் ஒழுங்காக அழிக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்வையிடுவதற்காக நான் அனுப்பும் அதிகாரிகளிடம் அவைகளைக் கொடுத்து விடுவது. இரண்டாது நானும் என்னுடைய வீரரும் நாடு முழுவதும் படைநடத்திச் சென்று அரசு கட்டளைப்படி செயல்படுத்தியிருக்கிறீர்களா என்று நேரில் காண்பது. நான் இந்த இரண்டில் எதற்கும் தயாராயிருக்கிறேன் என்றும் ஆனால் அவர்களுக்கு எந்த முறை விருப்பமோ அதன் படி செயல்படலாமென்றும் கூறினேன். நான் படையுடன் நாட்டிற்குள் செல்லும்போது தலைமைப் பாளையக்காரர்கள் என்னைப் பாசறையில் வந்து கட்டாயமாகக் காண வேண்டும். மற்றொரு வழியைக் கடைப் பிடிப்பதனால், பாளையக்காரர்கள் கயத்தாற்றில் என்னுடன் தங்க வேண்டுமென்றும், அரசின் கட்டளைகளைச் செயல்படுத்துவதை மேற் பார்வையிட நான் அனுப்பும் சிறு குழுக்களுடன் தங்கள் நிர்வாகிகளை அனுப்புதல் வேண்டும் என்றும் கூறினேன்.

எல்லாக் கோட்டைகளும் அழிக்கப்பட்டு ஆயுதங்கள் எல்லாம் ஒப்படைக்கப்பட்டன என்ற செய்தி எனக்குக் கிடைத்தவுடன் ஒவ்வொரு பாளையக்காரனும் தன் பாளையத்திற்கு அமைதியாகத் திரும்ப இசைவேன் என்று உறுதி கூறினேன். என்னுடைய பேட்டி முடிவதற்கு முன் கோட்டைகளை அழிப்பதற்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கும்