பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 306


-ளென்று நாம் நம்புவதற்குக், காரணங்கள் உள்ளன. ஆயுதங்களைப் பொறுத்தவரை அவ்வளவு விரைவில் எல்லா ஆயுதங்களையும் ஒப்படைத்து விடுவார்கள் என்று என்மனதில் படவில்லை. பாளையக்காரர்களின் வேறுபாடுகளும் நீண்டநாள் பழக்கங்களும் அந்த நடவடிக்கையை எதிர்க்கச் செய்கிறது. ஆனால், முதலில் மிகச் சில நிகழ்ச்சி களிலேயே நேரக்கூடிய- அறிக்கையில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல்களைச் செயலாக்கும் நடவடிக்கை, ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் அவர்களுடைய பழக்கத்தைப் பற்றிய மனவேறுபாட்டை மிக விரைவில் மாற்றி, ஆயுதந்தாங்கிய பாளையக்காரனை நிலத்தை உழுது வாழும் அமைதியும் பணிவும் நிறைந்த உழவனாக்கிவிடும்.

பாளையக்காரர்களின் படை பறிமுதலைச் சென்னை அரசு ஏற்றுக் கொண்டது. ஆயினும் அது திட்டப்படி அச்செயலைப் பயனுடையதாக்கி எளிதில் நிறைவேற்ற, மேஜர் பானர்மனின் தீர்ப்புக்கு எதிராகக் கட்டளையிட்டது. பாளையக்காரர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்யக் கூடாதென்றும், அவரவர் திருப்பிக் கொடுக்கும் ஆயுதத்தின் விவரத்திற் கேற்ப் ஒவ்வொருவருக்கும் அவரவர் தரும் ஆயுதத்திற்கேற்ற பரிசோ அல்லது விலையோ கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தது. (மேலிடத்திற்கு நடுக்கம் போலும்! - ந.ச.)

ஒரு திங்களுக்குள் திருநெல்வேலியிலுள்ள பாளையக்காரர்களின் கோட்டைகள் எல்லாம் இடிக்கப்பட்டுவிட்டன என்று நம்புவதற்கேற்ற காரணங்கள் மேஜர் பானர்மனுக்குக் கிடைத்தன. 28 ஆம் தேதி அக்டோபர் திங்களில் அவர் எழுதுகிறார்:

'ஒவ்வொரு பாளையத்திலுமுள்ள கோட்டைகளின் எண்ணிக்கை, துப்பாக்கிகள், சுரங்கவழிகள், ஒவ்வொரு பாளையக்காரனிடமும் வேலை செய்யும் பணியாட்களின் எண்ணிக்கை, அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களின் விவரம் முதலியவை அடங்கிய குறிப்புக்கள் பல பாளையக்காரர்களிடமிருந்து வந்தன. இவற்றை இத்துடன் அனுப்பியுள்ளேன். கோட்டைகளை அழித்தது பற்றிய விவரம், ஆயுதங்களைப் பறிக்காமல் பாளையங்களிலுள்ள மக்கள் தாங்களாகவே நான் பிரித்து அனுப்பி மேற்பார்வையிடச் சொன்ன அதிகாரிகளிடம் கொடுத்த ஆயுதங்கள் பற்றிய குறிப்புக்களிலிருந்து தயாரித்த ஆயுதங்களின் விவரம் ஆகியவைப் பற்றிப் பொதுவாக அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதேபோல் காப்டன் புரூசிடமிருந்து வந்த கடிதத்தின்படி ஒன்றையும் சேர்த்து அனுப்பியுள்ளேன். மேற்குப் பாளையங்களுக்கு அனுப்பிய வெவ்வேறு அதிகாரிகள் கூட்டத்தின் பொதுத்தலைவராகப் புரூஸ் அனுப்பப்பட்டான். அவன் எழுதிய கடிதத்தில் பாளையக்காரர்களின் நிர்வாகிகள் கோட்டை