பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/315

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

307 கால்டுவெல்

இடித்தல் முதலிய அரசு கட்டளைகளைக் கருத்தோடு செயல் முறையில் செய்து முடித்துள்ளனர் என்ற செய்தி மனநிறைவளிக்கிறது. லெப்டினன்ட் பாக்ஷா தலைமையில் அனுப்பப்பட்ட ஆள்கள், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை அழித்துப் பறிமுதல் செய்யப்பட்ட ஆறு பாளையங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் குறிப்பு பற்றிய விவரங்களடங்கிய பிரதியும் இத்துடன் இருக்கிறது. (இந்த விவரங்களை இப்பொழுது அரசு ஆவணங்களிடமிருந்து எடுக்க முயன்றால் நல்லது. ந.ச.)

பாளையக்காரர்களைக் கயத்தாற்றில் நிறுத்திவைத்ததன் குறிக்கோள் ஏற்கனவே நலமாகவும் முழுமையாகவும் நிறைவேறி விட்டமையால் இன்று காலை அவர்கள் தங்கள் பாளையங்களுக்குத் திரும்பிச் செல்லக் கட்டளை பெற என்னைச் சந்திக்குமாறு செய்தியனுப்பினேன். இனி அரசு இந்நிலையில் அவர்கள் புறப்படுவதற்கு முன் அவர்கள் மனதில் இந்நடவடிக்கைகளின் முடிவுகளைப் பற்றிய கருத்துக்களை நிலைபெறச் செய்ய, இச்சூழ்நிலையில் நான் மேற்கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றி எனக்கு அறிவிக்கப்பட்ட கண்டிப்பான வழிகளிலேயே அரசு இனிமேலும் அவர்களிடம் மிகக் கடுமையான முறையில் நடந்து கொள்ளும் என்ற எண்ணத்தை நினைவுறுத்தி ஒரு அறிக்கை தயாரித்து அதன் படியை ஒவ்வொரு பாளையக்காரனுக்கும் கொடுத்தேன். மற்ற பிரதிகள் செப்புத் தகடுகளில் எழுதப்பட்டு பின்னர் அவர்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் கூறினேன். (அம்மாடி! - ந.ச.) அச்சாசனம் (அச்செப்புத் தகடுகள்) இன்றும் இருப்பதாகவும் அவை ஜமீன்தார்கள் இல்லங்களில் இருப்பதாகவும் தெரிகிறது. பாளையங்களில் முக்கியமான கிராமங்களில் பொது இடத்தில் அது கூறும் செய்தியை எல்லா மக்களும் பொதுச் செய்தியாக அறியும்படி பதிக்கப்பட வேண்டுமென்றும் கூறினேன். இக்கட்டளைப்படி நடந்து கொள்வதற்கான பொறுப்பு ஒவ்வொரு பாளையக்காரருடையது என்றும் தெரிவித்தேன்.

ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம் பாளையக்காரர்கள் சென்னைக்கு நாடு கடத்தப்பட்டு, சென்ற இடத்திலேயே இறந்தனர். (அந்தோ! ந.ச.) இந்தப் பாளையக்காரர்கள் இவர்களுடைய சில முக்கிய கூட்டாளிகள் இவர்களைப் பற்றி மேஜர் பானர்மன் எழுதிய கடிதமொன்றில் குறிப்பிடுகிறார்.

எனக்கு இட்ட கட்டளையை உறுதிப்படுத்த பறிமுதல் செய்யப்பட்ட தலைமைப் பாளையக்காரர்களை மாகாணத்திற்கு அனுப்பி வைக்கத் தீர்மானித்தேன். நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள் லெப்டினன்ட் டங்னரின் பொறுப்பில் விடப்பட்டார். கட்டபொம்ம நாயக்