பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/316

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 308

கனும் காடல்குடி தலைமைப் பாளையக்காரனும் 18 ஆம் தேதியிட்ட என் அறிக்கையின்படி நாடு கடத்தப்பட்டனர். ஆனால் கல்லார்பட்டி பாளையக்காரன் ஏழை; உடல் நலமில்லாதவன்; சிறுவன் குளத்தூர் பாளையக்காரன் நோயாளி; தீர்மான புத்தியில்லாதவன்; 60-க்கும் 70க்கும் இடைப்பட்ட வயதுக் கிழவன், பொதுமக்களின் நல்லெண்ணத்திற்கு ஏற்றவாறு அவர்களுடைய குறைபாடுகளைக் கண்ணுற்று அவர்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளக் கூறினேன். அவர்கள் தலையிட்ட கலகங்களில் எந்தவிதத் தீங்கும் நேரிடவில்லை. எனவே தற்போதைக்கு அவர்களை இராமநாதபுரத்திற்கு அனுப்பும்படி லூஷிங்டனிடம் ஒப்படைத்தேன். இனி அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அரசாங்கம் கட்டளையிடுகிறதோ அதே போல் அவர்கள் நடத்தப்படுவார்கள். நாகலாபுர பாளையக்காரனின் நிர்வாகி சடகோபப்பிள்ளை. அவன் எசமானின் முக்கிய ஆலோசகன். பாளையத்தில் அவனுக்கு அதிக செல்வாக்கு உண்டு. எனவே, நாடு கடத்தப்பட்ட பாளையக்காரனுடன் அவனும் செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத தேவையாகும் என்று நான் தீர்மானித்தேன். கொல்லார் பட்டிபாளையக்காரனான குருட்டு மைத்துனன் செளந்திரலிங்கநாயக்கன் தான் அவன் தந்தையினுடைய தீய ஆலோசகன்; அவனும் ஆறுமுகம் பிள்ளையும்தான் பாளையக்காரனுடைய பொதுச் செயல்களின் தனி நிர்வாகிகள், பரடாம் பெருமாள்பிள்ளை அதிக செல்வாக்குடையவன். அவன் ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரனின் நிர்வாகியும் ஆலோசகனுமாவான். எனவே அத்தகைய விவரங்களுடைய தனியார்களை நாட்டைவிட்டு வெளியேற்றத் தயங்கவில்லை.

கம்பெனியின் வெற்றி

சிவகிரி பாளையக்காரனுடைய மகன் சிவகிரி மாப்பிள்ளை வன்னியனால் தூண்டப்பட்டு அவன் தந்தைக்கு எதிராகக் கலகங்களைச் செய்தான்; அதன் காரணமாக சிவகிரி பாளையத்தில் குழப்பங்களும் அச்சமூட்டும் காட்சிகளும் ஏற்பட்டன. அதனால் அந்த நாடு மட்டுமின்றி அருகேயுள்ள பாளையங்களும் மிகுதியாகத் துன்பப்பட்டன. அத்தகைய குழப்பங்களை அடக்கக் கம்பெனி ஆயுதந்தாங்கிய படையை அடிக்கடி அனுப்ப வேண்டியிருந்தது என்ற செய்திகளை ஐயங்கள் எதுவுமின்றி உறுதியாக ஆவணங்கள் கூறுகின்றன. இந்த மனிதனுக்குத் திறமைகள் இருந்தமையால் அவன் ஒரு சிறந்த கலகம் மூட்டுபவன் என்று பெயர் பெற்றான். அவன் துணிவுள்ளவன், வீரன்; சுறுசுறுப்புள்ளவன்; அதனால் எல்லா நேரங்களிலும் விரும்பிப் பின்பற்றக் கூடிய ஏற்புடைய தலைவனாய் அவன் விளங்கினான். இந்தச்