பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

311 கால்டுவெல்



இயல் - 8

பாளையக்காரரின் இறுதிப் போர்
கலகத்திற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி ஆவணங்களில் காணப்படுகின்ற அறிக்கைகள், பத்திரங்கள் இவைகளிலிருந்து கடந்த பாளையக்காரர் போரைப்பற்றிய செய்திகளுடன் கூட, தொடக்கத்திலிருந்து இறுதிவரை அப்போரில் பங்கெடுத்துக் கொண்ட இருவர் எழுதிவைத்த இரண்டு தனித்தனி சண்டையைப் பற்றிய குறிப்புகளும் நமக்குப் பயனுடையதாயிருக்கின்றன. இவற்றுள் ஒன்று ஜெனரல் வெல்ஷ் எழுதிய இராணுவ நினைவுகள், 1830 இலண்டனில் வெளியாகிய இப்புத்தகம் மிகவும் சுவையுடையது. அப்போது காப்டனாக இருந்த ஜெனரல் வெல்ஷ் படையெடுப்பு முழுவதிலும் படைத் தலைவனின் முக்கிய உயர்ந்த அதிகாரியாக இருந்தான். மற்றொன்று தச்சநல்லூரைச் சேர்ந்த ஜியார்ஜ் எ. ஹக்ஸ் (Mr. George, A Hughes) எழுதிய தென்பாளையக்கர்களின் கடைசி கலகங்களையும் இறுதிக் கீழ்ப்படிதலையும் பற்றிய குறிப்பு. இவர் படையின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். இப்புத்தகம் 1814இல் ஹக்ஸ் இறந்த ஒன்பது ஆண்டு கட்குப் பிறகு வெளியிடப்பட்டது. ஹக்சின் பெயர் திருநெல்வேலியில் மிகப் புகழ் பெற்றிருந்தமையால் அவரைப் பற்றிச் சில செய்திகள் தெரிந்து கொள்ள விரும்பியிருந்திருக்கலாம். எனவே கீழ்க்காணும் குறிப்பு ஹக்சின் குறிப்புப் புத்தகத்திற்கு முன்னுரையாக சென்னை இலக்கிய அறிவியல் இதழ் ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது. இக்குறிப்பு அவர் இதழில் வெளியாகி இருந்தது.

ஹக்சு இந்திய-பிரிட்டிஷ் பெருந்தகை. தென் மாவட்டங்களில் வாணிப நுணுக்கங்களுக்கும் வெற்றி நிரம்பிய சிந்தனைகட்கும் மிக்க பெயர் வாய்ந்தவர். முதலில் மதுரையில் ஊதியம் வழங்கும் அதிகாரியாயிருந்து பின்னர் சென்னை நாட்டாட்சிப் பணியிலே இருந்த ஹக்ஸ் என்பவரின் மகன். சிறுவயதிலேயே இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டார். கேம்பிரிட்ஜ் ஏசுநாதர் கல்லூரியின் முதல்வராயிருந்த டாக்டர் ஹக்கான இவரது மாமாவின் மேற்பார்வையில் சிறந்த கல்வி அறிவுபெற்றார். இந்