பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 312

தியாவிற்கு திரும்பியதும் திருவாங்கூரில் ரெசிடன்ட் அதிகாரியின் கீழ் கணக்கராயும் தென்பாளையக்கார பேஷ்குவின் கலெக்டராயிருந்த எஸ்.ஆர். லூஷிங்டன் அலுவலகத்திலும், பிறகு 1799 இல் பாளையக்காரர் கலகங்களில் அடக்குமுறை அதிகாரியாக இருந்த கர்னல் பானர்மன் காப்டனுக்குள்ள ஊதியம் பஞ்சப்படியுடன் மலபார் ஜென்டோ படை மொழி பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்த வேலை 1799 செப்டம்பர் இரண்டாம் தேதி அரசால் நிலையாக உறுதி செய்யப்பட்டது. 1801 இல் வந்த கர்னல் அக்னியூவிடமும் அதே வேலையிலிருந்தார். பின்பு 1808 இல் திருவாங்கூர் போரின்போது ஜெனரல் செயின்ட் லெகர் (S. Leger) தலைமையில் சென்ற படையுடன் சென்றார். 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அவருடைய தொண்டுக்காக அரசாங்கத்தின் பாராட்டைப் பெற்றார். இடையே அவர் வாணிகத்திலும் ஈடுபட்டிருந்தார். அவர் சார்லசு வாலசு யங் என்பவருடன் கூட்டாளியாக இருந்தார். யங் 1806-1808க்கும் இடையே திருநெல்வேலியில் மிகப் பரந்த வெற்று நிலத்தைக் காபி, இண்டிகோ, பஞ்சுச் செடிகளைப் பயிர் செய்யக் குத்தகைக்கு எடுத்தார். அதற்கு ஆண்டு வாடகை 2000 ரூபாய்கள். குத்தகையின்படி கம்பெனியாருடன் அவர் செய்து கொண்ட சலுகை உரிமைச் சீட்டுக்காலம் முடியும்வரை அதைத் தொடர்ந்து பயிரிடலாம்.


1809 இல் 'யங்' இறந்தபின் அந்தச் சீமானுடைய உடைமை உரிமை மாற்றியளிக்கப்பட்டவராக ஹக்சு நியமிக்கப்பட்டிருந்ததால், அவர் குத்தகைக்காரராக ஆனார். அச்சலுகை உரிமைச் சீட்டுகாலம் முடிந்ததும் அந்த மானியம் அதே குத்தகைக்கு அதே திட்டங்களுடன் புதுப்பிக்கப்பட்டது. அதே போல் குளத்தூர் காடல்குடி மிட்டாக்களையும் வாங்கிப் பலவித வாணிபங்களைச் செய்து வந்தார். 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அவர் இறக்கும்வரை இலாபமும் இழப்பும் நிறைந்த அவ்வாணிபத்தைச் செய்து வந்தார்.

'ஹக்சு என்பவருக்குத் திருமணமே ஆகவில்லை. ஆனால் அவருக்குப் பல குழந்தைகள் இருந்தன. அவர்களை இந்துக்களாகவே வளர்த்து வந்தார்' என்றும் நான் தெரிவிக்கிறேன்.

1799 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனுக்குப் பின், அவனது இரண்டு உடன்பிறந்தவர்கள் இருந்தனர். அவர்கள் பாளையங்கோட்டையில் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் மூத்தவன் மிக மெலிந்தவன். பாளையம் பறிமுதல் செய்யப்படாமல் இருந்திருந்தால் அவன் தான் வாரிசாயிருந்திருப்பான். அவனைச் சார்ந்தவர்களும்