பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/329

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

321 கால்டுவெல்


கட்கு முன் கர்னல் பானர்மன் தலைமையில் சென்ற படையை எதிர்த்துக் கோட்டையை வெற்றிகரமாகக் காப்பாற்றினான். விரைவில் அவனும் குடும்பத்தினரும் கைதாக்கப்பட்டுக் கடும் சிறைத் தண்டனையிலிருந்தனர்.

முந்திய விவரங்களிலிருந்து மேஜர் பானர்மனை எதிர்த்துக் கோட்டையைக் காப்பாற்றப் போரிட்ட கட்டபொம்ம நாயக்கன் தூக்கிலிடப்பட்டான். சிறை பிடிக்கப்பட்ட கட்டபொம்ம நாயக்கன், உயிரோடிருந்த அவனது தம்பி என்றும் பார்த்தோம்.

பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்புதல்

எதிர்நோக்கியிருந்த உதவிப்படை திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டதும், மேஜர் மக்காலே அவருடைய படையைக் கயத்தாற்றை நோக்கி நடத்திச் சென்றார். உதவிப்படை வந்து தன்னுடன் சேர்ந்து கொள்ளக் கூடிய இடமாகப் பார்த்து அங்கு தங்கினார். எங்கள் பாசறைக்கு வெளியே எதிர்ப்பவர்கள் இல்லாமையால், எதிரிகள் தங்கள் நேரத்தை வீணாக்காது தூத்துக்குடியை முற்றுகையிட்டனர். இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி 'டச் ஆட்சியில் தூத்துக்குடி பற்றிய குறிப்பு' என்ற பகுதியில் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. பாஞ்சாலங்குறிச்சியை ஒடுக்கக் கயத்தாற்றில் கூடிய படைகளின் விவரங்களை ஜெனரல் வெல்ஷ் தருகிறார். அப்படையெடுப்புக்கு ஒன்பது துப்பாக்கிகளுடன் ஏறக்குறைய 3000 வீரர்கள் மொத்தத்தில் தேவைப்பட்டனர்.

முதலில் நாங்கள் சென்றது எட்டு மைல் தூரத்திலுள்ள ஒடராம்பட்டி, இரண்டாவது மேலும் எட்டு மைல் துரத்திலுள்ள பசுவந்தலை. இவை முதலில் எதிரிகள் இடையே புகுந்து தாக்கிய சாலையிலேயே இருக்கின்றன. எங்கள் இடத்தைவிட்டுப் புறப்பட்டதும் ஐந்து அல்லது ஆறு நூறு வீரர்களடங்கிய படை வீரத்தோடு எங்களைச் சந்திக்க முன்னேறின. மேஜர் அவர்களை எதிர்க்கக் குதிரைப்படைக்கு உத்தரவிட்டார். அந்த இரண்டு படைகளில் அருகிலும் பக்கவாட்டிலுமுள்ள காவல்காரரைத் தவிர்த்து எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும் தொண்ணுறு ஆட்களுக்குமேல் இருக்கமாட்டார்கள். ஆனால் அவர் ஜேம்ஸ் கிராண்ட் என் பவரின் தலைமையில் முன்னேறினர்.கிராண்ட் நான் இது வரை கண்ட சிறந்த திறமைவாய்ந்த வீரர்களுள் ஒருவர். அவர்களிடம் இரு சிறு துப்பாக்கிகள் இருந்தன. எதிரிகள் அருகில் நெருங்கியவுடன் அவற்றால் சுட்டனர். முதலில் அவர்களது செய்கை பின்வாங்கத் தூண்டுவது போலத் தோன்றியது. ஆனால் அவர்கள் நிதானமாக சண்டையிட்டுக் கொண்டே பின்வாங்கினார்கள். துப்பாக்கிகள் வைத்திருந்த வீரர்கள் தப்பி