பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/331

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

323 கால்டுவெல்


வேலியால் சூழப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அகழியில்லை. காலை 8 மணிக்கு அங்கு போய்ச் சேர்ந்ததும், சுமார் 900 கெஜ தூரத்திலிருந்து இரண்டு 12 பவுண்டு ஒரு 8 பவுண்டு துப்பாக்கிகளினால் வடமேற்கு அரணை உடனடியாகத் தாக்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டன. 8½ மணிக்கு சுடத் தொடங்கினோம். ஆனால் நாங்கள் எதிர் நோக்கியது போன்ற அழிவு எந்த விதத்திலும் ஏற்படவில்லை. எனவே மதியத்தில் சுவற்றிலிருந்து சுமார் நானூறு கெஜ தூரத்தில் உள்ள மற்றொரு கரைக்குத் துப்பாக்கிகள் நகர்த்தப்பட்டன. அங்கு 3.30 மணி வரை தொடர்ந்து துப்பாக்கித் தாக்குதல் நடைபெற்றது. இந்த இடத்தில் பிளவு ஏற்படலாமென்று தோன்றினமையால் தாக்குதலுக்கு ஆணை யிடப்பட்டது.

பீரங்கிப்பட்டாள அலுவலர் 'பிளவு' என்று கருதியது உண்மையில் பிளவே அல்ல என்பதை நீண்ட நேரம் கழிந்த பின்னரே கண்டறிந்தனர்.

இடை மதில்களிலிருந்தும் எங்களால் அழிக்க இயலாத 5 அல்லது 6 கொத்தளங்களிலிருந்தும் கற்பனை செய்யத் தக்க கடும் தீத்தாக்குதலுக்கிடையே கோட்டையைப் பாதுகாக்கும் படையினர் உற்சாகமாக முன்னேறினர். எங்கள் பட்டாளத்தினர் பகைவர் மேல் வேகமாய்ப் பாய்ந்தனர். ஆனால் பகைவர்களுடைய வேகத்தை எதுவும் தடை செய்யவில்லை. அரணைக்கூட வெகுவேகமாய்க் கடந்து விட்டனர், அந்தப் பிளவைச் சூழ்ந்து கொள்வதற்கான முயற்சிகள் திரும்பத் திரும்பச் செய்யப்பட்டன. ஆனால் எல்லாம் வீணாயின. ஏனெனில் கோட்டை அவ்வளவு உறுதியுடைய படையால் காக்கப்பட்டதன்றித் தாக்கிய இடத்தை அடைவதே பெரும்பாடாகிவிட்டது (உம்! ந.ச.) முயற்சியுடன் கோட்டை உச்சியை அடைந்த ஒவ்வொரு வீரனும் உடனுக்குடன் எதிர்த்துத் தாக்கி எறியப்பட்டான் (ஐயோ! ந.ச.) வேல்களாலும் துப்பாக்கிகளாலும் அவர்களது உடல் புண்களுடன் பிளக்கப்பட்டன. அங்கு தங்கித் தாக்க அவர்களுக்கு இடமே கிடைக்கவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு, படைகள் பின்வாங்க உத்தரவுகள் பிறப் பிக்கப்பட்டன. (சரி ... - ந.ச.) உண்மையிலேயே இரக்கத்திற்குரிய அச்சமூட்டத்தக்க காட்சி அங்கு தொடர்ந்துஏற்பட்டது. கொலை செய்யப் பட்டவரும் புண்பட்டவரும் பலரும் கோட்டையின் உடைப்பருகே அடிவாரத்தில் விடப்பட்டனர். உடனே எதிரிகள் திடீரென அவற்றின் மேலிருந்து கிளம்பிப் பின்புறம் தொடர்ந்து சென்றனர். மற்றவர்களோ செத்தவர்கள் சாகாதவர்கள் எல்லாருடைய உடல்களையும் துளைத்தனர். இந்தக் கோட்டையின் பிளவைக் காக்க எதிர் தாக்குதல் 18 முதல்