பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 326


ஹக்சு கூறுகிறார்: செயல்பட வேண்டிய இடத்திலே இப்படைகள் ஒன்றுகூட இரண்டு மாதங்கள் ஆயின. இடைக்காலத்தில் எதிரிகளின் எண்ணிக்கையை கூடுமான அளவுக்குக் குறைக்கும் போர்களைத் தவிர மெக்காலேயின் அதிகாரத்திற்குட்பட்ட போர்ச் செயல்கள் சிறிதாகவே இருந்தன. அதற்கிணங்க, கோட்டைக்கு மேற்குப்புறத்திலே ஒன்று அல்லது இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறு அணைவரம்பிலே தன் படை வீட்டை அமைத்திருந்தான். எங்கள் இருப்பிடத்திலே உண்டாக்கிய அவர்களது இரவுக் காலத்துத் தொல்லைகளும், எங்களுடைய கொள்ளையடிக்கும் வீரர் பகுதியினரிடம் பகல் நேரத்தில் செய்த சிறுசிறு போர்களும் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருந்தன. மேலும் மழைக்காலத்தில் எங்கள் வீரர்களிடமிருந்த துப்பாக்கிகளைவிட பகைவர்களது ஈட்டிகள் மிக்க வலிமை வாய்ந்தன என்ற எண்ணத்தை அவர்கள் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. (மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! - ந.ச.)

ஹக்சு சுருக்கமாகக் குறிப்பிடும் இந்நிகழ்ச்சி பற்றிய விவரத்தைத்தான் வெல்ஷ் குறிப்பிலிருந்து நான் இங்கு எடுத்துக் கூறுகிறேன்.

"12 ஆம் தேதி காற்றும் மழையும் கலந்த பலமான இடியும் புயலும் திடீரென எங்களைத் தாக்கின. அத்தகைய சூழ்நிலையே ஈட்டிகளை எதிர்த்துக் குண்டு பொழியச் சாதகமான நேரம் என அறிந்து நாங்கள் அணிவகுத்து நின்றோம். ஆனால் இமைப்பொழுதில் இயற்கை இடியை அடுத்து தூரத்திலிருந்த வெளிக்காவலிலிருந்து எங்களுடைய ஆறு பவுண்டு பீரங்கி ஒளியுடனும் ஒலியுடனும் வெடித்தது. அதன்பின் விரைவில் வலிமைமிக்க படை ஒன்று எதிர்த்து வந்து மோதியது. இப்படையில் பீரங்கிப்படையின் ஒரு பகுதியுடன் seசிப்பாய்களின் படையும் எங்களுக்கு மிக அருகிலிருந்த காவல் நிலையத்திலிருந்து 5 அல்லது 6 நூறு அடிகள் தூரத்திலிருந்த ஒரு இயந்திரத் துப்பாக்கியும் இருந்தன. வெளிக்காவல் ஆட்களை மதியத்தில் அகற்றி விடுவது வழக்கமாதலின், முதன்மையான அதிகாரியாகிய லெப்டினன்ட் எச்.டே வழக்கத்திற்கு மாறான மேகக் கூட்டங்களைக் கவனித்து மிக முன் அறிவிப்புடன் புயல் வருவதற்கான நிலையை உணர்ந்து மற்ற படையைத் தன்னிடமே நிறுத்திக் கொண்டு அதன் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டார். சூறைக்காற்று அவர்கள் முகத்தில் சுழன்று அடித்தது. அதைத் தொடர்ந்து ஓராயிரம் ஈட்டிக்காரர்களும் போரிடத் தொடர்ந்தனர். இவ்வாறு இரங்கத் தக்க நிலையில் இரு பெரும் விரோதிகளால் தாக்கப்பட்ட எங்கள் படையினர் சுடமுற்பட்டனர். ஆனால் ஒரு குண்டு கூடப் பாயவில்லை. ஒரு முறையே சுட்டபின்னர் துப்பாக்கி எதிரிகள் வசமாயின. இயந்திரத்