பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

329 கால்டுவெல்


அந்தப் பள்ளங்களில் பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டு போரிடத் தக்க வாய்ப்புகள் ஒன்றுமே கிடையாது. கீழேயிருந்து காப்பவர்கள் தங்களைக் குனிந்து சுடுபவர்களை ஈட்டிகளால் தாக்கத்தகுந்த பாதுகாப்பான இடங்களைப் பிளவின் ஓரங்களிலேயே வெகு திறமையாக அமைத்துப் பள்ளங்களைக் கட்டியிருந்தனர். (அப்படியா! - ந.ச) எறி குண்டு வீரர்கள் இத்தகைய பகைவர் தாக்குதலைப் பெருமளவில் கட்டுப்படுத்திவிட்டதாகக் கருதினர். ஆனால் பக்கங்களிலிருந்து வாயில்களின் வழியாக இந்த இடத்தை இறுதியில் அடைந்தார்கள் என்று நான் எண்ணுகிறேன். எனினும் பக்கவாட்டிலிருந்த வாயில்கள் பலத்த வேலியிடப்பட்டிருந்தன. பிளவின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் சுவருக்கு ஏற்படும் அழிவைச் செப்பனிட ஈரமண் தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்டு வந்தது. (அடே! - ந.ச.)

எதிரிகளுக்குள் பொதுவான பீதி ஒன்று ஏற்பட்டது. அவர்கள் தங்களைத் தாக்குபவர்களிடமிருந்து மிகவேகமாகத் தப்பி ஓடினர். ஆனால் கோட்டையை விட்டு வெளியேறிய உடனே இரண்டு வரிசைகளில் வீரர் களை அணி வகுத்தனர். அப்படியே பின்வாங்கி நெருங்கினர். ஆனால் சிறிதும் அஞ்சவில்லை! (உம் - ந.ச.) எங்கள் குதிரைப் படைகளோ பக்கங்களிலிருந்தும் அவர்களைத் தாக்கி அறுநூறு பேர்களைக் (அம்மாடி! - ந.ச.) கொலை செய்வதில் வெற்றி கண்டனர். எஞ்சியவர்கள் எளிதாகப் பின்வாங்கினர். இறுதியாக இரண்டாயிரம் வீரர்களைக் கொண்ட அணி தப்பிவிட்டது. (அடி சக்கை! - ந.ச.) நானுற்று ஐம்பது இறந்த உடல்கள், இரண்டு எதிரிகளின் உடல்கள் கோட்டையினுள் காணப்பட்டன. இதற்கு முன் நடந்தபோரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் வெளியே கிழக்குப் பக்கத்திலே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

திரு. ஹக்சு மேலும் கூறுகிறார்:

எஞ்சியிருந்த பாளையக்காரர் படை முழுவதும் கோட்டையிலிருந்து போர்க் கருவிகள் அற்றவர்களையும் பெண்களையும் நடுவே அடைத்துப் போர்க்கருவிகள் அணிந்த வீரர்கள் இருபக்கங்களிலும் அணி வகுத்து வர மிகப் பெருமிதம் கலந்த ஒழுங்குமுறையுடன் வெளியேறினர் (மெய்சிலிர்க்கிறது! - ந.ச.). எனினும் இக்கூட்டத்தின் மேல் எங்கள் காலாட்படை பாய்ந்து அழித்தது. ஆனாலும் விரைவிலேயே அப்படை உடைக்கப்பட்டு, திரும்பச் சிதறடிக்கப்பட்டது.74 வது அணியைச் சேர்ந்த தளபதி ஜில்கிரைஸ்ட் (Gilchrist) 77வது அணியைச் சேர்ந்த தளபதி ஸ்பால்டிங் (Spalding); காம்பெல் (Campbell) 4வது அணியைச் சேர்ந்த தளபதி பிரேசர் (Fraser) ஆகியோர் கொல்லப்பட்டனர். ஸ்காட்சு படை அணியைச் சேர்ந்த தளபதி மக்ளீன் (M'clean) மலாயைச்