பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25 கால்டுவெல்


பெயர்களும் தமக்குப் புதியனவாய் இருக்கின்றன என்றும் கூறுகிறார். பாண்டியன் (Pandion) என்ற அரசனுடைய மக்களும் முன்பு விவரித்த பாண்டிய (Pandaia) அரசனின் மக்களே என்பதற்குத் தக்க சான்றுகள் அவரிடம் இல்லை.

அகஸ்தஸ் என்ற அரசனிடம் பாண்டியரின் தூதுவர்

கிறிஸ்து பிறந்த ஆண்டுகளில், அலெக்சாண்டர் வழி வந்தோரின் ஆட்சிக் காலத்திற்கும் கிரேக்கர்களின் வாணிகம் இந்தியாவில் ஆரம்பித்த காலத்திற்கும் இடையே பாண்டி நாட்டைப் பற்றிய - முக்கியமாகத் திருநெல்வேலியைப் பற்றிய - செய்தி ஒன்றையும் கிரேக்கர்கள் நமக்குத் தெரிவிக்கவில்லை. ஆயினும், இச்சமயத்தில் நமக்கு வேறு நற்செய்தி கிடைத்துள்ளது. அகஸ்தஸ் என்ற அரசனிடம் அரசியல் தூதரை அனுப்பிய இந்திய அரசன் போரஸ் என்பவன் அல்லன். பாண்டியர்களின் அரசனாகிய பாண்டியன் (Pandiyan); தமிழில் பாண்டியன் என்று வழங்கப்பட்ட அரசனே என்று நான் எண்ணுகிறேன். அரசியல் தூதரின் பழைய விவரங்கள் கி.பி.20ல் ஸ்டிராபோ (Strabo) என்பவரால் தரப்பட்டுள்ளன. பொதுவாக இவ்வரசியல் தூதரைப்பற்றி எழுதும் கிரேக்கர் தவிர யார் அந்த இந்தியன் என்னும் விவரத்தைத் தெரிவிக்கவில்லை. ‘பாண்டிய அரசனிடமிருந்து அரசியல் தூதர் வந்தனர் - அல்லது மற்றவர்கள் கூறுவதுபோல (இவர்கள் கருத்து ஸ்டிராபோவுக்கு உடன்பாடல்ல என்பது வெளிப்படை) போரசிடம் வந்தனர்’ என்று ஸ்டிராபோ கூறுகிறார். ‘மற்றவர்கள்’ என்று ஸ்டிராபோவால் குறிப்பிடப்பட்டவருள் ஒருவர் நிக்கோலஸ் டமாசெனஸ் (Nicolaus Damascenus)என்பவர். இவர் தூதர்களை நேரிலே தாமே பார்த்ததைக் கூறியுள்ளார். அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புகளைப் பற்றிக் கூறும் வரலாற்று ஆசிரியர்கள் மூலம் போரஸ் அரசனது பெயர் ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகள் வரை பரவியிருந்தது. அதனால் இந்திய அரசருள் ஒவ்வொருவரும் போரசின் வழிவந்தோர் என்ற தவறுதலான எண்ணத்தைக் கிரேக்கர்கள் கொண்டிருந்தது இயற்கையே. ஆனால், பாண்டியன் என்ற பெயர் அதுவரை அறியப்படவுமில்லை; கண்டு பிடிக்கப்படவுமில்லை. யுசேபியஸ் (Eusebius) என்னும் வரலாற்று நூலில் கி.பி.320ல் இந்திய அரச தூதரைப் பற்றிய செய்தியுள்ளது. எனினும், சாதாரண கிரேக்க வரலாற்றிலும் அதன் ஆர்மீனியன் மொழி பெயர்ப்பிலும் யாரிடமிருந்து இத்தூதர் வந்தனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. நல்வினைப் பயனாக யுஸூபியஸால் எழுதப்பட்ட அப்பெயர், கிரேக்க வரலாற்றை முடிவுறச் செய்யக்