பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 336

 அல்லது காண்டத்திற்கும் பொருள் எழுதியுள்ளார். (அது எங்கே! - ந.ச) கடைசி சிந்துவின் பொருளை மட்டும் இங்கு குறிப்பிட்டால் அதுவே போதுமானது.

வெற்றிக் காண்டம்

வெள்ளை மருது என்ற மறவன் ஒருவன் தலைவனுக்கு உதவி செய்ய இப்போது வந்து சேர்ந்தான். நிலைமை மிக்க இசைகேடாக இருந்தது. தலைவர் அதிக அச்சத்துடன் இருந்தார். கோட்டையிலிருந்தோ அல்லது அவருக்கேற்பட்ட இன்னல்களிலிருந்தோ வெளியேற அவருக்கு வழியே இல்லை. இந்த வெள்ளை மருது எப்படியாயினும் பிரிட்டிஷ் படையை எதிர்ப்பதற்கு முன்வந்தான். அப்போது இருந்த நிலையில் அவன் அச்செயலைத் தான் ஒருவனாகவே செய்வதாக வற்புறுத்தினான். அதேபோன்று (உண்மைக்குப்புறம்பாகவும் கற்பனைக்கும் எட்டாததாகவும் அமைந்த செய்தி) அவன் முன்னேறிச் சென்று பிரிட்டிஷ்காரர்களைத் தாக்கினான். குதிரைப்படையை வெட்டினான். காலாட் படையைக் கலைத்து ஒட்டினான். ஒரு இலட்சம் துப்பாக்கி வீரர்களைச் சிறைப் பிடித்தான். எஞ்சியிருந்த ஒழுங்கற்ற பிரிட்டிஷ் படை பாளையங்கோட்டைக்குத் தப்பி ஓடியது. பிறகு பாளையக்காரன் மகிழ்ச்சியுடனும் மாண்புடனும் நாட்டை ஆட்சி செய்ய விடப்பட்டான் (என்ன துரையே! பொய்! 'ஓ! பிரட்டனே! பிரட்டனே! அலைகளை எல்லாம் ஆளும் பிரட்டனே!' என்று உன் நாட்டுக் கவிஞன் பாடினானே! அது பொய் இல்லையா? உன் நாட்டைவிட்டு இன்னொரு நாட்டை சுரண்ட வந்தாய்! வெட்கம் கெட்டுச் சூழ்ச்சிகள் செய்தாய்! ஒரு தாய் மக்களைப் பிரித்துப் பிரித்து ஆட்டினாய்! ஆண்டாய்! 'குரங்கு நியாயம்' செய்து பின்னர் எல்லாரையும் விழுங்கினாய்! இன்னொரு நாட்டின் உரிமையை மதிக்கத் தெரியாத மிருகம் நீ. சாத்தான் வேதம் ஒதுவது போல 'சத்யம்' என்கிறாய்! நீதி என்கிறாய்! பீரங்கியின் பலத்தால் எங்கள் தாயைத்துகிலுரிய நினைத்த குருடனே உன் ஆயுத பலம் - ஏன்? உன் ஆகாய விமானப் பலம் கூட எங்கள் - பொக்கைவாய்க் காந்தியின் சிரிப்பில் எரிந்ததே! உலகப் போரெல்லாம் வென்ற உன் இனம் எங்கள் உரிமைப் போரை வெல்லவில்லையே? எங்கள் காந்தி மகான் உன் நாட்டுக் கவர்னர் செனரல் கையாலேயே உன் நாட்டுக் கொடியை இறக்கச் செய்தாரே! என்ன ஆயிற்று உன் பீரங்கிப் பலம்? உன் நாட்டுப் படைபலம்? எல்லாம் எங்கள் நாட்டுப் பண்பு பலத்தின் முன்பு பஞ்சாய்ப் பறந்ததே. பேய்கள் போல் எங்கள் விடுதலை வீரர்களின் உடலைத் தின்றாய்! உன் உடலையும்தான் புழுக்கள் தின்றன. ஆனால் எங்கள் வீரத்தலைவர் ம.பொ.சியின் எழுத்தால் விடுதலை