பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/349

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

341 கால்டுவெல்


அவனுடைய பழைய கிராமம், இந்த நாலுகோட்டை என்ற பொருள்படும்படி (தனி) ஒருமைப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரையே 'ஓர்ம்' நெல்லிக்கோட்டை எனக் குறிப்பிடுகிறார். இப்பெயர் மதுரை மாவட்டத்திலுள்ள முழுதும் வேறுபட்ட ஒரு பாளையத்தின் பெயராகிய நிலக்கோட்டை என்பதுடன் குழப்பத்தை (கொச்சை ஆங்கிலப்பெயர்களால் வந்த குழப்பம் ஆங்கிலேயர்க்கே!-நச) விளைவிக்கிறது. படைத்தலைவன் புல்லர்ட்டனின் (Fullarton) கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் குறிப்புகள் சிவகங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் பலர் காலத்திலும் அது ஆங்கிலயே அரசை எதிர்க்க எவ்வளவு முனைப்போடு இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது. (ஓ! நல்லது - ந.ச)

சிவகங்கை அல்லது சிறிய மறவர் நாடு கிழக்குக் கடற்கரையிலிருந்து மேலூர் மாவட்டம் வரை பரவியிருந்தது. மேற்கே மதுரா; வடக்கே தொண்டை நாடு. நத்தம், கள்ளர் நாடுகட்கும் (Country of Tondiman) தெற்கே பெரிய மறவரின் எல்லைகள் ஆகியவற்றிற்கும் இடைப்பட்ட ஏறக்குறைய 50க்கு 40 சதுர மைல்கள் நீள அகலமுடையது. பொதுவாக அந்த நிலம் நெல் சாகுபடி செய்யப் பயனற்றது. வாய்க்கால்களோ அல்லது செயற்கை நீர்த் தேக்கங்களோ ஏற்பட முடியாத பாலைவனமாக இல்லாமலிருந்தபோதிலும் அதில் முட்களும் புதர்களும் தடையின்றித்தழைத்திருந்தன. காளையார்கோயில் கோட்டையைச் சுற்றிலும் ஏறக்குறைய 40 மைல் சுற்றளவுள்ள காளையார்கோயில் காடுகள் வேலிகளாலும் மற்ற பாதுகாப்புகளாலும் பலப்படுத்தப் பட்டிருந்தது. காட்டின் நடுவிலே அமையப்பெற்ற காளையார்கோயில் படையெடுப்புக்கு அல்லது முற்றுகைக்கு அப்பாற்பட்ட பாதுகாப்புள்ள புகலிடமாகக் கருதப்பட்டது. இந்தக் காடுகளிலும் அதைச் சூழ்ந்த நாடுகளிலும் ஆடுகளும் கால்நடைகளும் நிறைந்திருந்தன. அங்கு வாழும் மக்கள் பலர், கத்திகள், ஈட்டி, குத்தீட்டிகள், துப்பாக்கிகள் முதலிய போர்க் கருவிகள் தாங்கிய 12,000 போர் வீரர்களைப் போர்க்களத்திற்குக் கொண்டு வரத்தக்க திறமை வாய்ந்தவர். அவர்கள் தங்களுடைய அயலார்களான கூலிப்படைகளைவிட நாகரீகமுடையவராக இருந்த போதிலும் (ஓ! - ந.ச.) கலையும் தொழிலும் அவர்களிடையே மிகக் குறைவாகவே வளர்ந்திருந்தன. (அப்படி என்றால்? - ந.ச.) கூடுதலான முன்னேற்றம் அடையக் கூடிய நாடுதான் அது. ஆனால் தற்போது ஆர்க்காட்டு நவாபுக்கு, 1,75,000 ரூபாய் செலுத்தும் அரசருக்குப் பெரும்பாலும் ஐந்து இலட்ச ரூபாய்களுக்கு மேலான வருவாயைத் தந்தது.இந்த அரசர் தேவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிவகங்கை அரசர் பிரிக்கப்படுவதற்கு முன் இருந்த பெரிய மறவர்களின் அரசமரபில் வந்தவர்கள். 1773 இல் அவர்